பான் இயூ தெங்

மலேசிய அரசியல்வாதி

பான் இயூ தெங் (Fan Yew Teng, மே 12, 1942டிசம்பர் 7, 2010) மலேசியாவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை போராட்டவாதி. சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்கும் போராடியவர். அவர் ஒரு சீனராக இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.[1]

பான் இயூ தெங்
Fan Yew Teng
பிறப்பு12 மே 1942
கம்பார், பேராக், மலேசியா
இறப்புதிசம்பர் 7, 2010(2010-12-07) (அகவை 68)
பாங்காக், தாய்லாந்து
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
நோயிலின் ஹேசர்
Noeleen Heyzer
பிள்ளைகள்2 பெண்கள்

சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசிய அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்.[2]

மலேசியாவில் இனவாத அரசியலை வெறுத்தவர். மலேசிய அரசாங்கத்தின் கொள்கைகளைக் குறை கூறியதற்காக சிறைவாசம் அனுபவித்தவர். அதனால் தான் பெற வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் இழந்த ஒரு தன்னலமில்லாத அரசியல்வாதி. மலேசிய மக்களின் நினைவில் வாழும் ஒரு மாமனிதர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kile, J. (2014-02-05). "Fan Yew Teng". Moral Heroes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  2. Fan, Yew Teng (1989). "Author biography". The UMNO Drama: Power Struggles in Malaysia (PDF). Kuala Lumpur: Egret Publications. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்_இயூ_தெங்&oldid=4003142" இலிருந்து மீள்விக்கப்பட்டது