பான் தலை

மைக்கலாஞ்சலோவின் சிற்பம்

ஃபானின் தலை (Head of a faun) என்பது இத்தாலிய மறுமலர்ச்சிக்கால கலைஞரான மைக்கலாஞ்சலோவால் 1489 இல் செதுக்கப்பட்ட ஒரு தொலைந்துபோன சிற்பமாகும். பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிற்பமே இவரது முதல் புகழ்பெற்ற முதல் படைப்பாக கருதப்படுகிறது. இதை இவர் ஒரு பழங்கால சிற்பத்தை மாதிரியாகக் கொண்டு அதில் சில மாற்றங்களோடு தனது 15 அல்லது 16 வயதில் செதுக்கினார். ஜியோர்ஜியோ வசாரி எழுதிய கலைஞர்கள் வாழ்க்கை வரலாற்றின் படி, இச்சிற்பமானது இளவயது மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டது.

பார்கெல்லோ அருங்காட்சியகத்தில் 1944வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஃபானின் தலை சிற்பம்

மேற்கோள்கள்

தொகு
  • Artists Life — Michelangelo, page 14,15 — Enrica Crispino, 2001, Giunti Editore.
  • The Life of Michelangelo Buonarroti, page 23 — John Addington Symonds, BiblioBazaar.
  • Michael Angelo: Giorgio Vasari's Lives of the Artists, Fordham University

வெளி இணைப்புகள்

தொகு
 
  • The Boy Michelangelo carving the Head of the Faun - பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸோச்சி என்ற சிற்பியால் உருவாக்கப்பட்ட மைக்கேலாஞ்சலோ, ஃபான் முகத்தைச் செதுக்குவதை சித்தரிக்கும் சிலை. இது ஃப்ளோரன்ஸ் நகரத்தின் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • காணாமல் போன முகம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்_தலை&oldid=2652893" இலிருந்து மீள்விக்கப்பட்டது