பாபுலால் தாகியா
இந்திய விவசாயி
பாபுலால் தாகியா (Babulal Dahiya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் சத்னா அருகே உள்ள போரி காவ்ன் பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு விவசாயியாகவும் கவிஞராகவும் அறியப்படுகிறார்.[1] இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது பாபுலால் தாகியாவுக்கு வழங்கப்பட்டது.[2][3][4][5]
பாபுலால் தாகியா இதுவரை 110 வகையான பாரம்பரிய நெல்வகைகளை பயிரிட்டுள்ளார். இந்நெல் வகைகளின் குணநலன்களை ஆழமாகப் படித்திருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் இவர் தனது வயலில் இந்த பண்ணையில் சேமிக்கப்பட்ட விதைகளை விதைத்து ஆய்வு செய்து, பாரம்பரிய பயிர் வகைகளை உரங்களைப் பயன்படுத்தாமல் வளர்த்து வருகிறார். இவற்றுடன் உஞ்சேகாரா தொகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் சேர்ந்து அரிசி மற்றும் பிற கரடுமுரடான தானியங்களையும் பயிரிட்டு வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "How a Farmer From Madhya Pradesh Is Growing 110 Varieties of Rice in Just 2 Acres of Land". The Better India (in ஆங்கிலம்). 2017-07-15. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
- ↑ "Padma Awards" (PDF). Padma Awards ,Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019.
- ↑ "Seeing seed ripe makes me feel accomplished, says Padma Shri awardee Babulal Dahiya". Financial Express. 27 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.
- ↑ "MP Farmer's Initiatives for Traditional, Organic Farming Gets Him Praises from Ex-cricketer VVS Laxman". News 18. 19 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.
- ↑ "Of songs and seeds: This MP man is on a mission to save tradition, local crops". Neeraj Santoshi. Hindustan Times. 19 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.