பாபு ராவ் மேதியம்
பாபு ராவ் மேதியம் (Babu Rao Mediyam)(பிறப்பு 10 சூலை 1951) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 14வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவரும் ஆவார். மேதியம் கிழக்கு கோதாவரி மாவட்டம் இராஜமன்றியினைச் சேர்ந்தவர். கர்னூலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் பத்ராச்சலம் மக்களவைத் தொகுதிக்கு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பத்ராச்சலம் மக்களவைத் தொகுதியானது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
பாபு ராவ் மேதியம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | தும்பா மேரி விசயகுமாரி |
பின்னவர் | தொகுதி நீக்கப்பட்டது |
தொகுதி | பத்ராச்சலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூலை 1951 பேதனாலிபாலி, ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | கவுதமி |
பிள்ளைகள் | 2 மகன்கள் & 1 மகள் |
வாழிடம் | ராஜமன்றி |
மூலம்: [1] |