பாப்பாக்கோயில் கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில்
பாப்பாக்கோயில் கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் நாகப்பட்டினத்திற்குத் தென்மேற்கில் 5 கிமீ தொலைவில், அந்தணப்பேட்டைக்கு அடுத்தபடியாக உள்ளது.
இறைவன், இறைவி
தொகுமூலவர் சன்னதியில் திருவடி அருகே திருமகளும், நிலமகளும் இருக்க, நாபியில் பிரமன் இருக்க, ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் இறைவன் கஸ்தூரிரெங்கப் பெருமாள் என்ற பெயரில் ஒரே கல்லால் ஆன திருமேனியாகக் காட்சியளிக்கின்றார். [1]
அமைப்பு
தொகுஐந்து நிலை ராஜகோபுரமும், மகாமண்டபமும் கொண்டு கோயில் அமைந்துள்ளது. விநாயகர் விஷ்ணு கணபதியாக உள்ளார். வடபுறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.[1]