பாப்லா & காஞ்சன்
பாப்லா & காஞ்சன் (Babla & Kanchan) என்ற இருவரும் ஒரு இந்திய கணவன்-மனைவி இசைக் குழுவாக இருந்தனர்.[1] இவர்கள் சட்னி இசை மற்றும் தேசி நாட்டுப்புற இசை வகைகளில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்கள். காஞ்சன் 2004 இல் இறக்கும் வரை இவர்கள் நாற்பது ஆண்டுகள் ஒன்றாக இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பாப்லா ஷா பிரபல இசை இயக்குநர் இரட்டையர் கல்யான்ஜி ஆனந்த்ஜியின் தம்பியாவார்.
ஷா ஒரு முரசு இசைப்பவரும், தாளவாத்தியக் கலைஞரும், நேரடி நிகழ்த்துக் கலைஞரும், இசையமைப்பாளரும் மற்றும் பதிவு தயாரிப்பாளரும் ஆவார். இவர் 1962 இல் தனது இசைக்குழுவைத் தொடங்கினார். ஷா 1980 களில் குமாரி காஞ்சன் டிங்கெராவ் மெயிலுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தில் இருந்து தண்டியா ராஸ் அல்லது கர்பா ராஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகையான நாட்டுப்புற நடனம் 1970களில் ஷாவால் இசை ரீதியாக மறுவரையறை செய்யப்பட்டது.[2]
நிகழ்ச்சிகள்
தொகுஇரபூ சக்கர், தர்மத்மா மற்றும் குர்பானி போன்ற படங்களில் பின்னணி பாடகராக பாடிய பிறகு, காஞ்சன் தனது கணவருடன் சேர்ந்தார். இவர்கள் ஒன்றாக இணைந்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். காஞ்சன், கணவர் பாப்லாவுடன் சேர்ந்து, 1970 களில் இந்திய இசை வட்டாரங்களில் பிரபலமானார்.
இவர்களின் சர்வதேச ஈடுபாடுகள் இந்தித் (பாலிவுட்) திரைப்பட இசையிலிருந்து இவர்களை விலகி இருக்க வைத்தன. இவர்களில் நிகழ்ச்சி பெரும்பாலும் கரீபியன் நாடுகளில் பிரபலமாக இருந்தன. அங்கு அவர்கள் " ஹாட் ஹாட் ஹாட் " போன்ற சோகா வெற்றிகளைப் பெற்றனர், மேலும் இவர்கள் சட்னி இசை முன்னோடி பாடகர் சுந்தர் போபோவின் பழைய வெற்றிகளைப் புதுப்பித்தனர். இவர்களின் விரிவான சுற்றுப்பயண ஆதரவு காரணமாக, குச் கட்பாத் ஹை உள்ளிட்ட இவர்களின் எல்பி இசைத்தொகுப்புகள் வெளிநாடுகளுக்குச் சென்று ஓர் இந்தியக் குழு இசைத்த இசைத்தொகுப்புகளில் நன்றாக விற்பனையானது.
கைசே பானி போன்ற காஞ்சனின் தனி இசைத்தொகுப்புகள் போஜ்புரி பார்வையாளர்களிடையே பிரபலமாக இருந்தன. இவரது புகழ் ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களை மேம்படுத்துவதற்கான விளம்பரங்களுக்கு வழிவகுத்தது. திரைப்பட இசையமைப்பாளர் ராஜேஷ் சுப்பிரமணியனின் கருத்துப்படி, "கைகே பான் பனாரசுவாலா" என்ற பாடல் பாப்லா இசையமைத்தது எனத் தெரிகிறது.
பாடல்கள்
தொகுகாஞ்சன் பாடிய பல பாடல்கள் மேற்கிந்திய உள்ளூர்வாசிகளின் பழைய பாடல்களின் மறு ஆக்கமாகும். அல்லது அல்லது டிரினிடாட்டின் சுந்தர் போபோவின் சோகா பாரம்பரிய பாடலாகும்.
விருதுகள்
தொகுபாலியல் நாட்டுப்புற நடனங்களுக்கான நடன இசை சட்னி இசை என்று அழைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் ஷாவுக்கு இந்தி திரைப்பட இசைக்கு சிறந்த பங்களிப்புக்காக ரேடியோ மிர்ச்சி இசை விருது வழங்கப்பட்டது.
குடும்பம்
தொகுஇந்த தம்பதியருக்கு நிஷா [3] என்ற ஒரு மகளும் மற்றும் வைபவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். நிஷா பிறந்ததிலிருந்தே தனது தாயுடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். " ச ரி க ம ப சாம்பியன்ஸ் "என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைபவ் ஒரு முரசு இசைப்பவராக இருந்தார்.
இறப்பு
தொகுஇந்தியாவின் மும்பையில் உள்ள பம்பாய் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாப்லா சூலை 26 அன்று அன்று தனது 54 வயதில் இறந்தார்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ https://www.discogs.com/artist/1549172-Babla-Kanchan
- ↑ http://archive.indianexpress.com/news/the-rhythm-king/800368/3
- ↑ https://www.discogs.com/artist/6150806-Nisha-Shah
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.