பாப் ஃபாஸ்
ராபர்ட் லூயிஸ் ஃபாஸ் (Robert Louis Fosse ஜூன் 23, 1927 - செப்டம்பர் 23, 1987) ஓர் அமெரிக்க நடனக் கலைஞர், இசை-நாடக நடன இயக்குநர் மற்றும் நாடக மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார் .[1] இவர் மேடை மற்றும் திரைப்படங்களில் இசை படைப்புகளை இயக்கம் மற்றும் நடன அமைப்பாளராகவும் பணிபுரிந்தார். அதில் 1954 ஆம் ஆண்டில் நடன அமைப்பாளராகப் பணிபுரிந்த தி பைஜாமா கேம் மற்றும் 1975 இல் வெளியான சிகாகோ மற்றும் 1972 இல் வெளியான காபரேட் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத் தகுந்தன ஆகும்.
1973 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்கார், எம்மி மற்றும் டோனி ஆகிய விருதுகளை வென்றார். ஒரே ஆண்டில் இந்த மூன்று விருதுகளையும் வென்ற ஒரே நபர் இவர்தான் .இவர் நான்கு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.காபரெட் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருதினை வென்றார். இவர் எட்டு முறை டோனி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். இதில் ஏழு முறை நடன அமைப்பாளருக்காகவும் ஒரு முரை பிபின் திரைப்படத்தினை இயக்கியதற்காகவும் பெற்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசூன் 23, 1927 இல் சிகாகோ, இலினொயில் இவர் பிறந்தார். இவரின் தந்தை சிரில் கே, ஃபாஸ் நார்வேஜியன் அமெரிக்கர் ஆவார். இவர் விற்பனையாளராக தி ஹெர்ஷே நிறுவனத்தில் பணியாற்றினார்.[2] இவரின் தாய் சாரா அலைஸ் ஃபாஸ் ஆவார். ஆறு குழந்தைகளில் இவர் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்.[1][3]
இவருக்கு 13 வயதாக இருந்தபோது, சிகாகோவில் சார்லஸ் கிராஸுடன் தொழில் ரீதியாக நடைபெற்ற தி ரிஃப் பிரதர்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.[4]
திரைப்படம்
தொகு1957 ஆம் ஆண்டில் டோரிஸ் டே நடித்த தி பைஜாமா கேமின் திரைப்பட பதிப்பிற்கு இவர் நடன இயக்குநராகப் பணியாற்றினார். அடுத்த ஆண்டில் டாம் யன்கீசின் திரைப்பட பதிப்பிலும் இவர் நடன இயக்குநராகப் பணியாற்றினார்.
இவர் ஐந்து திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் ஷெர்லி மெக்லைன் நடிப்பில் வெளியான ஸ்வீட் சேரிட்டி இவரது முதல் திரைப்படம் ஆகும்.
அவரது இரண்டாவது படம், காபரேட் (1972), சிறந்த இயக்குநர் உட்பட எட்டு அகாதமி விருதுகளை வென்றது. மார்லன் பிராண்டோ நடித்த தி காட்பாதர் திரைப்படத்தினை இயக்கிய பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா இந்த பிரிவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லிசா மின்னெல்லி மற்றும் ஜோயல் கிரே இருவரும் காபரேட்டில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றனர்.[5] 1974 இவர் இயக்கத்தில் வெளியான லென்னி திரைப்படம் வரைகலை பற்றிய சுயசரிதை திரைப்படம் ஆகும்.இதில் டஸ்டின் ஹாஃப்மன் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகு1973 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்கார், எம்மி மற்றும் டோனி ஆகிய விருதுகளை வென்றார். ஒரே ஆண்டில் இந்த மூன்று விருதுகளையும் வென்ற ஒரே நபர் இவர்தான் .இவர் நான்கு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.காபரெட் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருதினை வென்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 McQuiston, John T. (September 24, 1987). "Bob Fosse, Director and Choreographer, Dies". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/1987/09/24/obituaries/bob-fosse-director-and-choreographer-dies-a-veteran-at-13.html. "Robert Louis Fosse was born in Chicago on June 23, 1927, the son of a vaudeville entertainer. He began performing on the vaudeville circuit as a child, and by the age of 13 he was a seasoned veteran of many burlesque shows. ..."
- ↑ Gottfried 2003.
- ↑ "Hardcover in Brief". The Washington Post. November 18, 1990 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102140608/http://www.highbeam.com/doc/1P2-1159456.html.
- ↑ Winkler, Kevin (2018-03-22). "Big Deal". Oxford Scholarship Online 1. doi:10.1093/oso/9780199336791.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199336791.
- ↑ "'Cabaret' Awards" Turner Classic Movies, accessed April 20, 2016