பாமா பரிணயம்

ஒய். வி. ராவ் இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாமா பரிணயம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 16,750 அடி நீளமுடைய தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் திரைக்கதை அமைத்து இயக்கி, ராயல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாமா பரிணயம்
இயக்கம்ஒய். வி. ராவ்
தயாரிப்புராயல் டாக்கீஸ்
நடிப்புசெருகளத்தூர் சாமா
வித்வான் சீனிவாசன்
ராஜா எம். ஜி. தண்டபாணி
டி. கே. நடராஜ பக்தர்
டி. பி. ராஜலட்சுமி
எஸ். பி. லட்சுமி
எஸ். எஸ். ராஜா மணி
கே. ரெங்கநாயகி
வெளியீடு1936
ஓட்டம்.
நீளம்16750 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

உப தகவல் தொகு

  • பாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (சந்தகமணி) எனும் இப்படத்தில், செருகளத்தூர் சாமா நாயகன் கிருஷ்ணனாகவும், டி. பி. ராஜலட்சுமி நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.[2]
  • இப்படத்தின் ஒரு காட்சியை, ஜவகர்லால் நேரு பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகை, கொடையாக நேருவிடம் அளிக்கப்பட்டது.[2]
  • பரிணயம் என்றால் திருமணம் என்று பொருள்.[2]

சான்றாதாரங்கள் தொகு

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  2. 2.0 2.1 2.2 "தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி. பி. ராஜலக்ஷ்மி :". www.kalkionline.com (தமிழ்). 2010. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமா_பரிணயம்&oldid=3713916" இலிருந்து மீள்விக்கப்பட்டது