பாமுள்ளூர்
பாமுள்ளூர் சங்ககாலத்தில் சேர மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர்.
இதனைச் சோழ மன்னன் ஒருவன் தாக்கி வென்று ஊர் மக்களைச் சீரழித்தான். அதனால் அவனது பெயர் “சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி” என அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறது. ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவ்வூரை வென்ற சோழனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் – பாடல் புறநானூறு 203.