பாயில் வெப்பநிலை
வெப்பவியக்கவியலில், பாயில் வெப்பநிலை (Boyle temperature) என்பது நல்லியல்பற்ற வளிமம் ஒன்று இலட்சிய வளிமமாகத் தொழிற்படும் போது அதன் வெப்பநிலை ஆகும். அழுத்தக் காரணி (compressibility factor) Z, 1 ஆக இருக்கும் போது, பாயில் வெப்பநிலை பின்வருமாறு தரப்படும்:
சாதாரண வளிமங்கள் பாயில் விதிப்படி செயல்படுவதில்லை. வெப்பநிலை மாறாது இருக்கும் போது ஒரு வளிமத்தின் கன அளவு அதன் அழுத்தத்திற்கு எதிர்விகிதத்தில் இருக்கும் என்பது பாயில் விதியாகும். இவ்விதியிலிருந்து வளிமங்கள் சிறிது மாறுபடுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒவ்வொரு வளிமமும் பாயில் விதிப்படிச் செயல்படுகின்றன. இந்த வெப்பநிலையே பாயில் வெப்பநிலை ஆகும்.