பாய்ம இயக்கவியல்
(பாய்ம இயக்கவிசையியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாய்ம இயக்கவியல் (Fluid dynamics) என்பது நீர்ம (திரவ) அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல்.[1][2][3]
பாய்மம் என்பது நீர்மம், வளிமம் (வாயு) ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்களுக்குப் பாய்மம் என்று பெயர்.
பாய்ம இயக்கவியலை நீர்ம இயக்கவியல் (Hydro dynamics), வளிம இயக்கவியல் (Pneumatics) என இருவகைப்படுத்தலாம்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Eckert, Michael (2006). The Dawn of Fluid Dynamics: A Discipline Between Science and Technology. Wiley. p. ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-40513-5.
- ↑ Anderson, J. D. (2007). Fundamentals of Aerodynamics (4th ed.). London: McGraw–Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-125408-3.
- ↑ White, F. M. (1974). Viscous Fluid Flow. New York: McGraw–Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-069710-8.