பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள்

பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள் (Faraday's laws of electrolysis) மைக்கேல் ஃபாரடே என்பவரினால் 1834 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவை.

முதல் விதி தொகு

மின்னாற்பகுப்பின் போது மின்வாயில் வெளிப்படும் பொருளின் நிறையானது (அல்லது பொருண்மை, m) மின்பகு நீர்மத்தின் வழியே பாயும் மின்னூட்டத்திற்கு (Q) நேர்த்தகவில் அமையும்.

m = z Q;
இங்கு, z - வெளிப்படும் பொருளின் மின் வேதிய எண்.

இரண்டாவது விதி தொகு

ஒரே அளவு மின்னூட்டம் மின்பகு நீர்மங்களின் வழியே பாயும் போது அதனால் மின்வாய்களில் வெளிப்படும் பொருள்களின் நிறை (அல்லது பொருண்மை, m) அத்தனிமங்களின் வேதிய இணைமாற்றுக்கு (E) நேர்த்தகவில் அமையும்.

m α E