பாரதியார் வித்தியாலயம் மேல்நிலைப் பள்ளி

பாரதியார் வித்தியாலயம் மேல்நிலைப்பள்ளி (Bharathiyar Vidyalayam Higher Secondary School) தமிழ்நாடு, தூத்துக்குடி மாநகரில் பெருமாள்புரத்தில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் ஒரு மேல்நிலைப் பள்ளியாகும்.

பாரதியார் வித்தியாலயம் மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
தூத்துக்குடி
இந்தியா
தகவல்
வகைஅரசு உதவிபெறும் பள்ளி
குறிக்கோள்அன்பு, அறிவு, அறம்
தொடக்கம்1956
பள்ளி மாவட்டம்தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
தரங்கள்6 முதல் 12 வரை
பால்இருபாலார்

வரலாறு தொகு

1944 ஆம் ஆண்டு சுப்பையா நாடார் அவர்களின் பெயரில் சுப்பையா வித்தியாலயம் உயர் துவக்கப்பள்ளியாகத் தொடங்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இப்பள்ளி சுப்பையா வித்தியாலயம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியாக மாறியது. 1956 ஆம் ஆண்டு குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களின் முயற்சியால் இப்பள்ளி வ.உ.சி. கல்விக்குழுவின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு வ.உ.சி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மாதிரிப் பள்ளியாக பணியாற்றி வருகிறது.

1956 சூலை மாதம் இப்பள்ளியின் புதுக்கட்டடத்திற்கான அடிக்கல்லை அன்றைய முதலமைச்சர் கே. காமராஜ் நாட்டினார். புதிய கட்டடத்தை 1960 சூலை 26 இல் மாநில அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் மகாகவி பாரதியாரின் பெயரால் "பாரதியார் வித்தியாலயம் மேல்நிலைப்பள்ளி" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாணவ, மாணவியர் சேர்ந்து பயிலும் பள்ளியாக செயல்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "தூத்துக்குடி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை துவக்கம்". Archived from the original on 2021-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.