பாரதீய ஜவான் கிசான் கட்சி
பாரதிய ஜவான் கிசான் கட்சி (Bharatheeya Jawan Kisan Party) என்பது முன்னாள் படை வீரர்கள் மற்றும் தேசிய படைவீரர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும்.[1]
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராக இக்கட்சி உருவாக்கப்பட்டது. தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிகள் மக்கள், விவசாயிகள் மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிக்கிறது என்று கூறுகிறது. கட்சியின் முதல் கூட்டம் 2020 ஜனவரி 1 அன்று கேரளா கண்ணூரில் நடைபெற்றது.[2] இக்கட்சியின் தேசியத் தலைவராக ராமச்சந்திரன் பவிலேரி உள்ளார். சாக்கோ கரிம்பில் தேசிய செயலாளராகவும், தம்பன் கே. ஏ பொருளாளராகவும் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ജവാൻ കിസാൻ പാർട്ടി ധർണ". Mathrubhumi (in மலையாளம்). 10 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-11.
- ↑ 2.0 2.1 "Ex-servicemen to launch political party". The Hindu. December 27, 2019.