பாரன்ஃகைட் 451

பாரன்ஃகைட் 451 பிரெஞ்சு இயக்குநர் பிரான்கோசிசு டிரவ்பட் இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் ஆகும், அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைகதையை இத்திரைப்படம் தழுவியுள்ளது. ஃபாரன்ஹீட் 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலையை குறிப்பதாகும் ஆகும்.

பாரன்ஃகைட் 451
இயக்கம்பிரான்கோசிசு டிரவ்பட்
தயாரிப்புலூயிசு ஆலன்
கதைஜீன் லூயிசு ரிச்சர்டு
பிரான்கோசிசு டிரவ்பட்
ரே பிராட்பரி (புதினம்)
இசைபெர்னார்டு கெர்மன்
நடிப்புஜூலி கிரிஸ்டி
ஆசுகர் வேர்னர்
சிரில் குசாக்
ஒளிப்பதிவுநிக்கோலசு ரோக்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்சு
வெளியீடுநவம்பர் 14, 1966 (அமெரிக்கா)
ஓட்டம்112 நிமிடம்

கதை தொகு

 
rightதீ எரிப்புத் துறை வீரன் மாண்டெக் ஆக நடிக்கும் ஆசுகர் வேர்னர்

இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் எதிர்கால அமெரிக்கா ஆகும். அங்கு புத்தகங்கள் வைத்திருப்பதும் படிப்பதும் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தால் அவரைக் கண்டுபிடித்து உடனே மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். அவரது புத்தகங்கள் உடனடியாகத் தீ வைத்து எரிக்கப்படும். அப்படி தீ எரிப்பதற்கு என்று தனியே தீ எரிப்புத் துறை ஒன்று இருந்தது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை செய்கிறான்.எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையில் அபாய மணி அடிக்கப்படும். தீ வைப்பதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அங்கே அனுப்பிவைக்கப்பட்டு, புத்தகங்களைக் கொளுத்தி வருவார்கள்.ஒரு நாள், வயதான பெண் ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியைத் தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக். அந்த வரியின் ஈர்ப்பில் புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று மல்லுக்கட்டும் வயதான பெண், தன்னைக் கொளுத்திக்கொள்கிறாள். புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தன் மனைவியிடம் தான் ஒரு புத்தகம் திருடி வந்ததைப் பற்றிச் சொல்லி, அதில் உள்ள வரிகள் அவன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகச் சொல்கிறான். அதன் பிறகு தீவைக்கச் செல்லும் இடங்களில் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். திருடிய புத்தகங்களைப் பிறர் அறியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான். புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான். இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள் வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விடயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார். அதற்குள் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியாலே அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைந்து நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினருடன் சேர்ந்துகொள்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து மனதிலே வைத்திருக் கிறார்கள். அந்தப் புத்தகங்களின் நடமாடும் வடிவம் போல அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, உலகில் இருந்து புத்தகம் எரிக்கப்பட்டாலும் அவர்கள் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து தருவதாகச் சொல்கிறார்கள். அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் விவிலியத்தின் ஒரு பகுதியை முழுமையாக மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான். அந்த நகரில் எதிர்பாராத யுத்தம் வெடிக்கிறது. குண்டுமழை பொழிகிறது. மனிதர்களைப் புத்தகங்களால் மட்டுமே மீட்க முடியும் என்று நடமாடும் புத்தக மனிதர்கள் வேறு இடம் நோக்கிப் பயணம் செய்யத் துவங்குகிறார்கள். அவர்களை மாண்டெக் வழி நடத்திப் போகிறான் என்பதுடன் முடிகிறது.[1]

 
இறுவட்டு அட்டை படம்

மேற்கோள்கள் தொகு

  1. http://www.vikatan.com/av/2009/jul/29072009/av0904.asp[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரன்ஃகைட்_451&oldid=3725934" இலிருந்து மீள்விக்கப்பட்டது