பாராசாஜிட்டா எலிகன்ஸ்
பாராசாஜிட்டா எலிகன்ஸ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | Chaetognatha
|
வகுப்பு: | Sagittoidea
|
வரிசை: | Aphragmophora
|
குடும்பம்: | Sagittidae
|
பேரினம்: | Parasagitta
|
இனம்: | P. elegans
|
இருசொற் பெயரீடு | |
Parasagitta elegans வெரில், 1873 |
பாராசாஜிட்டா எலிகன்ஸ் (Parasagitta elegans) என்பது சாஜிட்டிடே குடும்பத்தைச் சார்ந்த சிறிய அம்பு வடிவ புழு, முன்னர் இதனை சாஜிட்டா எலிகன்ஸ் என அழைக்கப்பட்டது.
புற அமைப்பியல்
தொகுபாராசாஜிட்டா எலிகன்ஸ் (முந்தைய சாஜிட்டா எலிகன்ஸ் ). பெரிய விலங்குகளின் உடல் குறுகிய, உறுதியான மற்றும் ஒளிபுகா தன்மை உடையதாக இருக்கிறது.
துடுப்புகள் பிரிக்கப்பட்ட, வட்டமான, மற்றும் முற்றிலும் சாய்ந்த நிலையில் இருக்கும். முன்புற துடுப்புகள் கீழ்புற நரம்பு முடிச்சுக்களில் இருந்து தொடங்கும். இதில் உணவுப் பாதைக் குழாய் உள்ளது. கண்களானது சிறிய,மற்றும் உருண்டை வடிவ நிறமிக் கொண்டது . கருப்பைகள் நீண்ட மற்றும் குறுகிய அமைப்பைக் கொண்டது . செமினல் வெசிக்கள் கோண வடிவத்தில், வால் துடுப்புகளுக்கு அடுத்ததாகவோ அல்லது மிக நெருக்கமாகவோ பின்துடுப்புகளிலிருந்து பிரிக்கப்படுகிறது.
உடற்கூறியல், இனப்பெருக்கம், வகைப்பாடு மற்றும் புதைபடிவ பதிவு போன்றவற்றிற்கு; கீட்டோக்நாத்தாவைப் பாருங்கள்
வகைப்பாட்டியல்
தொகுமூன்று துணை சிற்றினங்களான சாஜிட்டா எலிகன்ஸ் பால்க்டிகா மற்றும் சாஜிட்டா எலிஜன்ஸ் எலிஜன்ஸ் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த துணை சிற்றினங்கள் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து அவை வளரும் அளவு மாறுபடும் எனக் கருதப்படுகிறது, அவை ஒத்திருக்கும் சிற்றினங்களாக அறிகுறி இருக்கலாம். கொக்கிகள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை மூன்று துணை சிற்றினங்களில் சிறிது வேறுபட்டு காணப்படும்.[1]
சூழ்நிலையியல்
தொகுபொதுவானவை
தொகுஸ்பேடாலா சிற்றினம் நீரில் மூழ்கியவை தவிர மற்ற, அம்பு புழுக்கள் எல்லாமேநீரில் மிதப்பவைக்கான தகவமைப்பைப் பெற்றுள்ளன. இவை இரவில் நீரின் மேற்பரப்பில் நீந்திக் கொண்டும், பகல் நேரங்களில் நீரில் மூழ்கியும் காணப்படும். அவை பெரும்பாலான நேரங்களில் நீரோட்டத்திற்கு எதிராகவும், முன்னோக்கியும், வேகமாகவும் நகருவதற்கு வால் துடுப்பில் உள்ள நீளவாக்கில் அமைந்த தசைகளை பயன்படுத்துகிறது. கிடைமட்ட துடுப்புகள் உடற்பகுதிக்கு எல்லைகளாகவும் உயிரிக்கு நிலைப்புத்தன்மை வழங்குவதோடு நீந்தும்போது மிதப்பதற்கும் உதவுகிறது.
பரவல்
தொகுபாராசாஜிட்டா எலிகன்ஸ் மற்றும் மூன்று துணை சிற்றினங்களும் ஆர்க்டிக் பகுதிகளிலும் மற்றும் ஆர்க்டிக் துணைப்பகுதிகளிலும் வாழ்கின்றன. சா. எலிகன்ஸ் எலிகன்ஸ் என்பது கடலோர கடற்கரைப் பகுதியில் வாழும் துணை சிற்றினம். சா. எலிகன்ஸ் ஆர்க்டிக்கா என்பது போரியல்-ஆர்க்டிக்வடிவமாகவும், மற்றும் சா. எலிகன்ஸ் பால்டிக்கா என்பது சிறிய வடிவத்தைக் கொண்டு பால்டிக் கடல் அருகே மட்டும் காணப்படும் உயிரியாகும்.[2]