பாராடங்சுடேட்டு

ஓர் எதிர்மின் அயனி

பாராடங்சுடேட்டு (Paratungstate) [W12O42]12- என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். இந்த எதிர்மின் அயனியிலிருந்து வருவிக்கப்படும் உப்புகளும் பாராடங்சுடேட்டு என்று அழைக்கப்படுகின்றன. [H2W12O42]10- உள்ளிட்ட இந்த அயனியின் புரோட்டானேற்றம் பெற்ற வழிப்பெறுதிகளும் பாராடங்சுடேட்டு என்றே குறிக்கப்படுகின்றன. அம்மோனியம் பாராடங்சுடேட்டு (NH4)10[H2W12O42] என்பது தங்குதனை அதன் தாதுக்களில் இருந்து சுத்திகரிப்பதில் ஒரு முக்கியமான இடைநிலை வேதிப்பொருளாகும்.[1]

பாரா டங்சுடேட்டு கட்டமைப்பு [H2W12O42]10-, அதன் ஒப்பீட்டளவில் குறைந்த சமச்சீர்மையை எடுத்துக்காட்டுகிறது

(NH4)10(W12O42)·4H2O உப்பு எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டது.[2]

புரோட்டானேற்றமற்ற எதிர்மின் அயனியான [W12O42]12- C2h சமச்சீர் அமைப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lassner, Erick; Schubert, Wolf-Dieter; Lüderitz, Eberhard; Wolf, Hans Uwe (2005), "Tungsten, Tungsten Alloys, and Tungsten Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a27_229
  2. d'Amour, Hedwig; Allmann, Rudolf (1972). "Die Kristallstruktur des Ammoniumparawolframat-tetrahydrats (NH4)10[H2W12O42]·4H2O". Zeitschrift für Kristallographie 136 (1–2): 23–47. doi:10.1524/zkri.1972.136.1-2.23. Bibcode: 1972ZK....136...23D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராடங்சுடேட்டு&oldid=3762022" இலிருந்து மீள்விக்கப்பட்டது