பாராமவுண்ட் ஏர்வேஸ்

பாராமவுண்ட் ஏர்வேஸ் (Paramount Airways) சென்னையை சேர்ந்த விமான சேவை நிறுவனமாகும். பாராமவுண்ட் குழுமத்தின் தியாகராஜன், 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் நிறுவினார். பின்னர் அதன் தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தைத் தளமாக கொண்டு இயங்கியது. பிரேசிலிய எம்பெரேயர் விமானங்கள் மூலம் வர்த்தக பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவப்பட்டது. குத்தகைதாரர்களால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மே 2010 ல் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் பாராமவுண்ட் ஏர்வேஸின் எம்பெரேயர் விமானம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராமவுண்ட்_ஏர்வேஸ்&oldid=2745222" இலிருந்து மீள்விக்கப்பட்டது