பாரிக்கோடு

பாரிக்கோடு இளைஞர் விளையாட்டுகளில் ஒன்று. பாரித்து ஓடுதலும், பாரித்துத் தடுத்தலும் நிகழ்வதால் இந்த விளையாட்டுக்கு இப்பெயர் வந்தது. திருச்சி மாவட்டப் பகுதியில் இதனை மூலைப்புரி என்பர். மூலையில் தப்பியோடி வெளிவருவதால் இதனை இப்பெயரிட்டு அழைப்பர்.

ஆடும் முறை

தொகு

ஆட்டத்தில் இரண்டு அணிகள் இருக்கும். சுமார் 12 அடி நீளமுள்ள பக்கக் கோடுகள் உள்ள ஒரு கட்டம் வரையப்படும். அந்தக் கோடுகளில் கோட்டுக்கு ஒருவராகப் பக்கவாட்டில் ஓடி உள்ளிருப்பவர் வெளியேயும், பின்னர் வெளியில் இருப்பவர் உள்ளேயும் நுழைய விடாமல் தடுப்பர்.

மற்றொரு நான்கு பேர் உள்ளிருந்து வெளியேயும், எல்லாரும் வெளிவந்த பின்னர் வெளியிலிருந்து உள்ளேயும் சென்று உப்பு என்று சொல்லிக் கை குலுக்குவர். தொடப்படாமல் வெளியேறியும், உள்நுழைந்தும் எத்தனை பேர் எந்த அணியில் அதிக உப்பு (கை குலுக்கல்) வைக்கிறார்களோ அந்த அணி வெற்றியணி.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிக்கோடு&oldid=1287069" இலிருந்து மீள்விக்கப்பட்டது