பாரி தாக்குதல்

சதுரங்கத் திறப்பு வகை

பாரி தாக்குதல் (Barry Attack) சதுரங்க விளையாட்டில் விளையாடப்படும் ஒரு வழக்கத்திற்கு மாறான திறப்பு முறையாகும். வெள்ளைக் காய்களுடன் விளையாடுபவர் முன்னெடுக்கும் இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது.

abcdefgh
8
d4 white pawn
f4 white bishop
c3 white knight
e3 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
e2 white bishop
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
d1 white queen
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
பாரி தாக்குதல், தொடக்க அமைப்பு

1.d4 Nf6 2.Nf3 g6 3.Nc3 d5 4.Bf4. கருப்பு நிறக் காய்களுடன் விளையாடுபவர் வழக்கமாக 4...Bg7 என்ற நகர்வை விளையாடுவார். இதனால் 5.e3 0-0 6.Be2; என ஆட்டம் தொடரும். இருப்பினும் வெள்ளை 5.Qd2 என்று விளையாடி டார்சான் தாக்குதல் முறையிலும் ஆட்டத்தை தொடரலாம்.

பாரி தாக்குதல் திறப்பு, சதுரங்க விளையாட்டில் விளையாடப்படும் ராணியின் சிப்பாய் திறப்பு வகை ஆட்டமாகும். இத்திறப்புக்கு கருப்பு காய்களுடன் விளையாடுபவர் ராசாவின் இந்தியத் தடுப்பாட்டம், கிழக்கு இந்தியத் தடுப்பாட்டம்,பிர்க் தடுப்பாட்டம் போன்ற திறப்பு வகை ஆட்டங்களால் எதிர் கொள்ளுவார். குறிப்பாக நியாசு முர்செட்டு, மார்க்கு எப்தென், ஆரோன் சம்மர்சிகேல் போன்ற கிராண்டுமாசுட்டர்கள் இத்திறப்புடன் விளையாட்டைத் தொடங்கி ஆடுவார்கள். பாரி தாக்குதல் மற்றும் தொடர்புடைய 150 தாக்குதல் இரண்டையும் ஆய்வு செய்து கொல்லும் சதுரங்கத் திறப்பு என்ற புத்தகத்தை ஆரோன் சம்மர்சிகேல் எழுதினார்.[1][2]

பாரி தாக்குதலின் செயல்திறன் இதன் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களால் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.[3] இத்திறப்பில் பொதுவாக வெள்ளைக் காய் ஆட்டக்காரர் , ராசா பக்கத்தில் ஆக்ரோசமான தாக்குதலை நடத்துவார். பல நேரங்களில் ஒரு இறுதிமுற்றுகையை அமைப்பதற்காக வெள்ளையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காய்களை தியாகம் செய்வதும் நிகழ்கிறது. 1991 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற கிராண்டுமாசுட்டர் பாவெல் பிளாட்னி–மார்ட்டின் ஃபெட்டே இடையே நடைபெற்ற போட்டியை இந்த திறப்பாட்ட வகைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். இந்த ஆட்டத்தில் பிளாட்னி தனது எதிராளியின் மன்னரை பலகையின் நடுப்பகுதிக்கு வர கட்டாயப்படுத்தி 23.e4 நகர்த்தலுக்குப் பிறகு எதிராளிக்குத் தோல்வியை ஏற்படுத்தினார்.[4]

1.d4 Nf6 2.Nf3 g6 3.Nc3 d5 4.Bf4 Bg7 5.e3 Bg4 6.Be2 c6 7.Ne5 Bxe2+ 8.Qxe2 Nbd7 9.0-0-0 0-0 10.h4 Qa5 11.h5 Nxe5 12.dxe5 Ne4 13.hxg6 Nxc3 14.Qh5 Nxa2+ 15.Kb1 fxg6 16.Qxh7+ Kf7 17.Bh6 Rg8 18.Rh4 g5 19.Bxg7 gxh4 20.Bf6+ Ke6 21.Qxe7+ Kf5 22.Qh7+ Ke6 23.e4 1–0 (கருப்பு தோற்கிறது)

மேற்கோள்கள் தொகு

  1. "The Kenilworthian: Barry Attack Bibliography".
  2. Aaron Summerscale (1999). A Killer Chess Opening Repertoire. Globe Pequot. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85744-519-0. https://archive.org/details/killerchessopeni0000aaro. 
  3. "GM Eric Prie on Barry Attack [D00], Trompowsky [A45]".
  4. "Pavel Blatny vs. Martin Fette (1991)". Chessgames.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரி_தாக்குதல்&oldid=3937279" இலிருந்து மீள்விக்கப்பட்டது