பாரி வேட்டை
பாரி வேட்டை என்பது ஒரு விழாக்கால விளையாட்டு. சித்திரா பௌர்ணமி அன்று பொதுவாக இந்த விளையாட்டு நடைபெறும். இதனைச் சில இடங்களில் முயல்வேட்டை என்றும் கூறுவர். இந்த விளையாட்டின்போது முயல் வேட்டை விலங்குகளில் முதன்மை இடத்தைப் பெறும்.
சிற்றூர் மக்கள் கூட்டமாகச் சென்று வேட்டையாடுவர். வேட்டையாடிய விலங்கு அல்லது பறவைகளின் தலை வேட்டையாடியவனுக்குத் தரப்படும். குடல் அவர்களது தெய்வத்துக்குப் படையலாக்கப்படும். எஞ்சிய எல்லாப் புலவுகளும் ஊர்மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இந்த வேட்டை விழாவில் அரசர்களும் பெருநிலக் கிழார்களும் உயர்வு-தாழ்வு இல்லாமல் கலந்துகொள்வர். இக்காலத்தில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
- மறைகின்ற விளையாட்டுகள், 2002