பார்குளோரி நிதி மையம்
தைவான் நாட்டிலுள்ள ஒரு வானளாவி
பார்குளோரி நிதி மையம் (Farglory Financial Center) தைவான் நாட்டின் தாய்பெய் நகரத்திலுள்ள சின்யி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். இது தைவானில் எட்டாவது உயரமான கட்டிடம் என்றும் சின்யி சிறப்பு மாவட்டத்தில் நான்காவது உயரமான கட்டிடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. தாய்பெய் 101, தாய்பெய் நான் சான் பிளாசா மற்றும் கேத்தே இலேண்டுமார்க்கு ஆகியவை இதர மூன்று வானளாவிகளாகும். கட்டிடத்தின் உயரம் 208 மீ, தரைப் பரப்பளவு 61,147.58 சதுரமீட்டர்களாகும். தரையிலிருந்து 32 மேல் தளங்களும், 4 அடித்தள நிலைகளும் இக்கட்டடத்தில் உள்ளன.[1]
பார்குளோரி நிதி மையம் Farglory Financial Center 遠雄金融中心 | |
| |
தகவல் | |
---|---|
அமைவிடம் | சின்யி மாவட்டம், தாய்பெய், தைவான் |
ஆள்கூறுகள் | 25°2′23″N 121°33′51.3″E / 25.03972°N 121.564250°E |
நிலை | நிறைவு |
உயரம் | |
கூரை | 164.5 மீட்டர்[1] |
தள எண்ணிக்கை | 32 |
தளப் பரப்பு | 61,147.58m2[1] |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | சூ-யுவான் லீ |