பார்சுட்டோவைட்டு
பார்சுட்டோவைட்டு (Barstowite) என்பது Pb4[Cl6|CO3]•H2O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் வெண்மை நிறத்துடன் ஒளிபுகும் தன்மை கொண்டதாக இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் பார்சுட்டோவைட்டு கனிமத்தின் கடினத்தன்மை அளவு 3 என்று கணக்கிடப்படுகிறது. வெண்மையான கீற்றுகளும் விடாப்பிடியான வைரத்தின் பளபளப்பும் இக்கனிமத்தின் பண்புகளாகும்[1].
பார்சுட்டோவைட்டு Barstowite | |
---|---|
கிரீசிலுள்ள லேவ்ரியான் மாவட்ட்த்தின் பாசா இலிமானி பகுதியில் கிடைத்த பார்சுட்டோவைட்டு கனிம்ம். | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Pb4[Cl6|CO3]•H2O |
இனங்காணல் | |
நிறம் | வெண்மையும் ஒளிபுகும் தன்மையும் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | விடாப்பிடியான மிளிர்வு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பார்சுட்டோவைட்டு கனிமத்தை Bsw[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் கோர்ன்வால் பகுதியிலுள்ள செயிண்ட் எண்டெல்லியன் என்ற குக்கிராமத்தில் பார்சுட்டோவைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1947 முதல் 1982 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த இரிச்சர்டு டபிள்யூ பார்சுட்டோவ் என்ற கனிமச் சேகரிப்பாளர் நினைவாக இக்கனிமத்திற்கு பார்சுட்டோவைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது[1] (1947–1982), a Cornish mineral collector.[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Barstowite at Mindat.org mineralogical website
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Mineralogical Record article on Richard Barstow". Archived from the original on 2008-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.