பார்பதி பருவா

இந்திய யானைப் பாகி

பார்பதி பருவா (Parbati Barua) என்பவர் இந்தியாவின் ஒரே யானைப் பாகியாக அறியப்படுகிறார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு "யானைகளின் ராணி" என்ற ஆவணப்படத்தை மார்க் சாண்டு புத்தகத்தின் துணையுடன் பி.பி.சி. வானொலி உருவாக்கியது. இந்திய குடிமகளான இவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்திலுள்ள கௌரிப்பூரில் ஒரு பெரிய சமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். [1][2][3] மறைந்த பிரகிருதி சந்திர பருவா பார்பதியின் தந்தையாவார். பிரதிமா பருவா பாண்டேவின் சகோதரியாகவும் தேவதாசு புகழ் திரைப்படத் தயாரிப்பாளர் பிரமதேசு பருவாவின் மருமகளாகவும் பார்பதி பருவா அறியப்படுகிறார். [4] பார்பதி தற்போது கவுகாத்தியில் வசிக்கிறார். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்த ஆசிய யானை நிபுணர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். [5]

யானை மேலாண்மை கொள்கைகள், காட்டு யானைகளைப் பிடிப்பது, நகர்ப்புறங்களுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவது மற்றும் யானைப் பாகர்களுக்குப் பயிற்சியளிப்பது குறித்த ஆலோசனைகளை பார்பதி பருவா வழங்கி வருகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "THE ELEPHANT PRINCESS". 30 April 1995. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  2. Anupam Bordoloi. Dr. Manas Pratim Das (ed.). "Wild at heart". The Telegraph (Calcutta, India edition) website. பார்க்கப்பட்ட நாள் 2007-06-26.
  3. "In the Shand of time, he left his Mark on elephant conservation in India". 24 April 2014. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  4. "Lady mahout". www.theweekendleader.com. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  5. "Welcome to the Asian Elephant Specialist Group". www.asesg.org. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பதி_பருவா&oldid=3233914" இலிருந்து மீள்விக்கப்பட்டது