பார்பாரா அசுகின்சு
பார்பாரா எஸ். அசுகின்சு (Barbara S. Askins) (பிறப்பு: 1939) ஓர் அமெரிக்க வேதியியலாளர். போதுமான ஒளிபடாத ஒளிப்பட எதிர்நகல்களின் உருவத்தை மேம்படுத்தும் வழிமுறையைப் புதிதாகப் புனைந்தார். இம்முறையை நாசாவும் மருத்துவத் தொழில்துறையும் பயன்கொள்கின்றன. இது அசுகின்சுக்கு 1978ஆம் ஆண்டுக்கான தேசியப் புதுமைப்புனைவு பெருமையை ஈட்டித் தந்தது.
பார்பாரா அசுகின்சு | |
---|---|
பிறப்பு | 1939 பெல்ஃபாசுட், டென்னசி, அமெரிக்கா |
வாழிடம் | ஃஅண்ட்சுவில்லி, அலபாமா |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | மார்ழ்சல் விண்வெளி பறப்பு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | அலபாமா பல்கலைக்கழகம், ஃஅண்ட்சுவில்லி |
விருதுகள் | 1978ஆம் ஆண்டுத் தேசியப் புதுமைப்புனைவாளர் |
இளம்பருவமும் கல்வியும் தொடக்கநிலை வாழ்க்கைப்பணியும்
தொகுபார்பாரா அசுகின்சு (நியே சுகாட்) 1939இல் டென்னசியில் உள்ள பெல்ஃபாசுட்டில் பிறந்தார்.[1] முதலில் இவர் ஆசிரியராக இருந்து, பிறகு மகனும் மகளும் பிறந்த்தும் பள்ளியில் அறிவியல் கல்வியைத் தொடர்ந்தார். இவர் அண்ட்சுவில்லியில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளவல் பட்டமும் அறிவியல் முதுவர் பட்டமும் பெற்றார்.[1][2]
ஆராய்ச்சிப் பணி
தொகுவிருதுகளும் தொழில்முறை உறுப்பாண்மைகளும்
தொகுபுதுமைப்புனைவு, புத்தாக்க மேம்பாட்டுக் கழகம் 1978இல் அசுகின்சை அவ்வாணடின் தேசியப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்தது.[3] இவரே இத்தகைமையை முதன்முதலில் ஈட்டிய பெண்ணாவார்.[2]
அசுகின்சு அமெரிக்க வேதியியல் கழகத்திலும் சிக்மா சி தகைமை ஆய்வுக் கழகத்திலும் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்திலும் உலக வருங்காலக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Stanley, Autumn (1993). Mothers and daughters of invention: notes for a revised history of technology. New Brunswick, N.J.: Rutgers University Press. pp. 574–575. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-2197-1.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ 2.0 2.1 "Barbara Askins: Inventor of a New Film Developing Method". Famous Women Inventors. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
- ↑ "Great Images in NASA – Barbara Askins, Chemist". Great Images in NASA. NASA. Archived from the original on 23 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.