பார்பாரா எர்க்கொலனோ

பார்பாரா எர்க்கொலனோ (Barbara Ercolano) ஓர் இத்தாலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் அண்டத் தூசு, விண்மீன் உருவாக்கம், முதனிலைக் கோள்வட்டு ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர்’. இவர் மூனிச்சில் உள்ள உலூத்விக் மேக்சிமில்லியப் பலகலைக்கழக நோக்கீட்டகக் கோட்பாட்டு வானியற்பியல் துறையின் பேராசிரியர் ஆவார்.[1]:{{{3}}}

இவர் நேப்பிளில் பிறந்து இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் வானியற்பியல் கற்றார். அக்கல்லூரியிலும் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து முதுமுனைவர் பட்டம் பெற்றதும், எக்சீட்டர் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளர் ஆனார்]. இவர் மூனிச் பல்கலைக்கழகத்தில் 2010 இல் பேராசிரியராகச் சேர்ந்தார்.[2]:{{{3}}}

அரசு வானியல் கழகம் வானியலுக்கு வழங்கும் பவுலர் விருதை 2010 இல் இவர் வென்றார்]].[3]:{{{3}}}

மேற்கோள்கள்

தொகு
  1. Prof. Dr. Barbara Ercolano, The International Max Planck Research School on Astrophysics, பார்க்கப்பட்ட நாள் 2019-09-04
  2. Bio: Barbara Ercolano, பார்க்கப்பட்ட நாள் 2019-09-04
  3. Previous Fowler Award winners (Astronomy) (PDF), Royal Astronomical Society, பார்க்கப்பட்ட நாள் 2019-09-04

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பாரா_எர்க்கொலனோ&oldid=3951397" இலிருந்து மீள்விக்கப்பட்டது