பார்பியர்-வைலேண்டு தரங்குறைப்பு வினை

ஆல்பா கார்பனை ஆல்க்கீனாக மாற்றும் செயல்முறை

பார்பியர்-வைலேண்டு தரங்குறைப்பு வினை (Barbier–Wieland degradation) என்பது கார்பாக்சிலிக் அமிலத்தின் கார்பன் சங்கிலியில் ஒரு கார்பன் அணுவின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஒரு வினை செயல்முறையாகும். கார்பாக்சில் குழுவுக்கு அடுத்ததாக உள்ள கார்பன் ஓர் எளிய மெத்திலீன் பாலமாக அதாவது எந்த பதிலீடுகளும் இல்லாத ஒரு கார்பனாக இருந்தால் மட்டுமே இவ்வினை நிகழமுடியும். கார்பாக்சில் மற்றும் ஆல்பா கார்பனை ஆல்க்கீனாக மாற்றும் செயல்முறையாக வினையின் போக்கு அமைகிறது. பின்னர் உருவாகும் ஆல்க்கீனை ஆக்சிசனேற்றம் மூலம் பிளந்து இறுதியில் முன்னதாக ஆல்பாவாக இருந்த கார்பனின் நிலையை கார்பாக்சிலாக மாற்றுகிறது [1][2].

மேற்கோள்கள் தொகு

  1. Byron Riegel, Byron; Moffett, R. B.; McIntosh A. V. (1955). "nor-Desoxycholic Acid". Organic Syntheses 24: 38. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV3P0234. ; Collective Volume, vol. 3, p. 234
  2. Byron Riegel, Byron; Moffett, R. B.; McIntosh A. V. (1955). "3,12-Diacetoxy-bisnor-cholanyldiphenylethylene". Organic Syntheses 24: 41. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV3P0237. ; Collective Volume, vol. 3, p. 237