பாறைத்தூண்

கற்களாலான தூண் போன்ற அமைப்பு

பாறைத்தூண் (Stalagnate) என்பது சுண்ணாம்புக்கல் குகையின் கூரையிலிருந்து அக்குகையின் தரைப்பகுதி வரை உருவாகியுள்ள தூண் போன்ற வடிவத்திலான பாறையாகும். இப்பாறை, தூண் அல்லது கல்சேர் தூண் (sinter column) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. விழுதுப்பாறை மற்றும் புற்றுப்பாறை நீட்சிகள் சந்திப்பதால் அல்லது விழுதுப்பாறை வளர்ந்து தரைப்பகுதியை அடைவதால் பாறைத்தூண் உருவாகிறது. மேலும் விழுதுப்பாறை மற்றும் புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே பாறைத்தூண் [1] என்றும் கருதப்படுகிறது.

எசுப்பானிய நெர்சா குகைகளில் உள்ள பாறைத்தூண்

பாறைத்தூண் வடிவங்கள் தொகு

கற்சேர்க்கை நிகழ்ந்து ஒருமுறை பாறைத்தூண் உருவானபிறகு, நீர் சொட்டுவது தடைபட்டு தண்ணீர் வெளிப்புறமாக வழிந்தோடுகிறது. இதனால் பாறைத்தூண் தன்னுடைய கூம்பு வடிவத்தை இழக்க ஆரம்பிக்கிறது. சில காலத்திற்குப் பின்னர் மழைநீர் மறைப்புகளின் ஒளியியல் பிரிப்புக்கு வாய்ப்பில்லாத நிலையில் பாறைத்தூண்களின் வடிவம் உருளை வடிவமாக மாறுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறைத்தூண்&oldid=3220587" இலிருந்து மீள்விக்கப்பட்டது