பாலகுருநாத சுவாமி

பாலகுருநாதசாமி என்பவர் நாட்டார் தெய்வங்தளுள் ஒருவராவார். இவரை பாலகுரு சாமி என்றும் அழைப்பர். பாலகுருசாமியின் அன்னை அங்காள பரமேஸ்வரி என்று கூறுகின்றனர். [1]

தொன்மம் தொகு

பாலகுரு சாமியின் தோற்றம் குறித்து வழக்காற்றுக் கதை கூறப்படுகிறது.

ஒரு பிராமணக் குடும்பத்தினர் காவட்டூர் என்னும் ஊரிலிருந்து மதுரை மாவட்டம் பிள்ளையார் பாளையம் என்னும் கிராமத்திற்கு சென்றனர். வழியில் ஒரு குழந்தை பிராமணக் குடும்பத்தை தடுத்து தன்னையும் அழைத்து செல்ல வற்புறுத்தியது. பிராமணர்கள் மறுத்தும் உங்களுக்குத் துணையாக வருகிறேன். நல்ல வசதிகளைச் செய்து தருகின்றேன் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது.

அயன்பாப்பாகுடி என்னும் ஊரில் அக்ரஹாரத்தில் வீடுகட்டும் போது அந்தக் குழந்தை எனக்குத் தனியாக ஒரு இடம் ஒதுக்கி, நீங்கள் விளைவிக்கும் நெல் அறுவடையான உடன் ஒருமண் குடுவையில் 4 மரக்கால் நெல் கொட்டி. அதை அடுத்தவருடம் எடுத்துக் குத்தி புடைத்துப் பொங்கல் நிவேதனம் செய்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் பங்காளிகள் சாப்பிடவேண்டும். வேறுயாரும் அதைச் சாப்பிடக் கூடாது என்றும் கூறியது.

இவ்வாறு கூறிய குழந்தைதான் பாலகுருநாதசாமி என்றும், பாலகுருநாதனுக்கு ஒரு கோயிலும் கட்டிவைத்தனர். பாலகுருநாதன் லிங்கவடிவினன் என்றும், பாலகுருநாதனின் தாயார் அங்காள பரமேஸ்வரி என்றும் கூறும் பிராமணர்கள் அக்கோயிலுக்குள் பிரதிஷ்டைச் செய்து வழிபட்டு வந்தனர்.

ஆதாரங்கள் தொகு

  1. பாலகுருநாதசாமி வழிபாடு - இரா. அனந்தலட்சுமி, எம்‌.ஏ..எம்‌ஃபில்‌., அழகப்பா பல்கலைக்சழகம்‌, கோவைமையம்‌ புத்தகம்:- நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும்‌ நம்பிக்கைகளும்‌ - தொகுப்பு -இரா.சந்திரசேகரன்‌, பக்கம் 41,42
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகுருநாத_சுவாமி&oldid=3716932" இலிருந்து மீள்விக்கப்பட்டது