பாலிகிரேசு

ஆக்சைடு கனிமம்

பாலிகிரேசு (Polycrase) என்பது கருப்பு அல்லது பழுப்பு நிறத்திலுள்ள உலோக அணைவு யுரேனியம் இட்ரியம் ஆக்சைடு கனிமம் ஆகும். பாலிகிரேசு-(Y) என்றும் இது அழைக்கப்படுகிறது. (Y,Ca,Ce,U,Th)(Ti,Nb,Ta)2O6 என்பது இக்கனிமத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடாகும்.. படிக உருவமற்ற இக்கனிமத்தின் கடினத்தன்மை மதிப்பு 5 முதல் 6 என மோவின் அளவுகோல் தெரிவிக்கிறது. மேலும் பாலிகிரேசு கனிமத்தின் ஒப்படர்த்தி 5 ஆகும். கனிமத்தில் கிட்டத்தட்ட 6% அளவுக்கு யுரேனியம் ஒரு பகுதிப் பொருளாக இருப்பதால் கனிமம் கதிரியக்கப் பண்பைக் கொண்டுள்ளது. பளிங்குக் கல் பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறை வகைகளில் பாலிகிரேசு காணப்படுகிறது.

நையோபியம் மிகு அருமண் ஆக்சைடு இயுக்செனைட்டுடன் பாலிகிரேசு தொடர் வரிசையாக உருவாகிறது. நோர்வே நாட்டின் பிளெக்கிப்யார்டு நகராட்சிக்கு அருகிலுள்ள இத்ரா தீவிலுள்ள ஒரு மீன்பிடி கிராமத்தில் 1870 ஆம் ஆண்டு முதன் முதலில் பாலிகிரேசு கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிகிரேசு&oldid=2924755" இலிருந்து மீள்விக்கப்பட்டது