பாலிகுளோரினேற்ற டெர்பீனைல்கள்
பாலிகுளோரினேற்ற டெர்பீனைல்கள் (Polychlorinated terphenyls) என்பவை டெர்பீனைல்களின் குளோரினேற்ற வழிப்பெறுதிகளாக உருவாகும் ஒரு குழுவைச் சேர்ந்த சேர்மங்களாகும். பல்குளோரினேற்ற டெர்பீனைல்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். இவை வேதியியல் முறையில் பாலிகுளோரினேற்ற பைபீனைல்களுடன் தொடர்பு கொண்ட சேர்மங்களாகும். இவ்விரு குழுக்களின் வேதிப்பண்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன. குறைவான மின் கடத்து திறன், உயர் வெப்பநிலைப்புத் திறன், வலிமையான காரங்கள் மற்றும் அமிலங்களால் பாதிக்கப்படாமை போன்றன இவற்றின் பண்புகளாகும் [1]. தண்ணீரில் இவை கரைவதில்லை மற்றும் தீப்பிடித்து எரிவதுமில்லை.
குறிப்பிடத்தக்க அளவுகளில் வெவ்வேறு வகையான குளோரினேற்ற சேர்மங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை கலவையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காலத்தில் மின்மாற்றிகளில் வெப்ப மாற்று முகவர்களாக, நெகிழியாக்கிகளாக, உயவு எண்ணெய்களாக, தீத்தடுப்பிகளாக பாலிகுளோரினேற்ற டெர்பீனைல்கள் பயன்படுத்தப்பட்டன [1]. சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இச்சேர்மங்களின் உற்பத்தியும் பயன்பாடும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன.
பாலிகுளோரினேற்ற டெர்பீனைல்களின் அனைத்துலக வர்த்தகம் ராட்டர்டேம் மாநாட்டில் முறைப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Filyk, G. (2011-07-01). "Polychlorinated terphenyls" (pdf). United Nations Economic Commission for Europe.