பாலியல் அடையாளம்

பாலியல் அடையாளம் (Sexual identity) அல்லது பாலுணர்வு அடையாளம் என்பது ஒருவர் தான் எவரைக் காதலிக்க நினைக்கிறார் அல்லது எவரால் பாலினக் கவர்ச்சி உறுகிறார் என்பதைக் குறிக்கிறது.[1] பாலியல் அடையாளம் என்பதைப் பாலியல் சார்புநிலை அடையாளம் எனவும் சுட்டலாம். மக்கள் தம் பாலுணர்வுச் சார்புநிலையை அடையாளப்படுத்தலாம் அல்லது அடையாளப்படுத்தாமலும் இருக்கலாம்.[2] Sexual identity and sexual behavior are closely related to sexual orientation, but they are distinguished,[1] அடையாளம் என்பது தன்னைப் பற்றிய தனியரின் கருத்துநிலையாகும்; நடத்தை என்பது நடப்புப் பாலியல் செயல்பாடுகளை, அதாவது எதிர்பாலின அல்லது ஒத்த பாலின அல்லது இருபாலினக் காதல் அல்லது கவர்ச்சியைக் குறிப்பிடும்; இக்கவர்ச்சி ஒன்றுக்கும் மேற்பட்ட பாலினங்களின்பாலும் ஏற்படலாம் அல்லது எப்பாலினம் மீது ஏற்படாமலும் இருக்கலாம்.

பாலியல் அடையாளத்துக்கான வரலாற்றுநிலைப் படிமைகள் அதைச் சிறுபான்மையர் சார்ந்த நிகழ்வாகக் கருதுகிறது. ஆனால், நிகழ்காலப் படிமைகள் மிகப் பொதுவான நிகழ்வாகக் கருதுகிறது. இவை பிற பெரும்பான்மைப் பாலியல் அடையாளக் கோட்பாடுகளையும் நிகழ்வுகளையும் கடந்த மிகப் பொதுவான நிகழ்வாகச் சுட்ட முயல்கின்றன.[3]

வரையறைகளும் அடையாளமும் தொகு

பாலியல் அடையாளம் என்பது தனியரின் பொது அடையாளத்தின் சொந்த பாலுணர்வு சார்ந்த ஒரு கூறாக அல்லது ஓர் உறுப்பாகவே விளக்கப்படுகிறது. தனியரின் முழுமையான பன்முக அடையாளம் என்பது அறம், சமயம், இனக்குழுமம், தொழில் சார்ந்த பிற அடையாளக் கூறுகளின் ஒருங்கிணைப்பாகவே அமைகிறது.[4]

பாலியல் அடையாளம் தனியரின் வாழ்நாள் முழுவதிலும் மாறிக் கொண்டே இருக்கலாம்; இது உயிரியல் பால்பகுப்பு, பாலுணர்வு நடத்தை, உண்மையான பாலுணர்வு சார்புநிலை ஆகியவற்ரைச் சார்ந்தோ சாராமலோ அமையலாம்.[5][6][7] ஓர் 1990 ஆம் ஆண்டைய சமூக நிறுவன்மொன்றின் பாலுணர்வு சார்ந்த கள ஆய்வில், 16% பெண்களும் 36% ஆண்கலும் மட்டுமே ஓரளவு ஒத்தபாலினக் கவர்ச்சி கொண்டுள்ளதாகவும் அவர்கள் இருபாலின உறவும் மேற்கொள்வதுண்டு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.[8]

பாலியல் அடையாளம் பாலுணர்வு சார்புநிலையை விட பாலியல் நடத்தையையே நெருக்கமாகச் சார்ந்தமைகிறது. இதே கள ஆய்வில் 96% பெண்களும் 87% ஆண்களும் ஒத்த பாலின, இருபாலின பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும் மாறாக 32% பெண்களும் 43% ஆண்களும் ஒத்த பாலினக் கவர்ச்சி கொண்டுள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளது. இந்த முடிவுகளை கண்ணோட்டமிட்ட கல ஆய்வு நிறுவனம் பின்வரும் குறிப்ப்பை வழங்கியுள்ளது: " Development of self-identification as homosexual or gay is a psychological and socially complex state, something which, in this society, is achieved only over time, இதில் கணிசமான தற்போராட்டமும் தன் ஐயமும் செயல்படுவதோடு சமுக மட்ட ஏந்துஇன்மையையும் செயல்படுகிறது"[8]

பாலியல் அடையாள வகைகள் தொகு

கலப்பினப் பாலுணர்வு எதிர்பாலினக் கவர்ச்சி கொண்ட வகைமையாகும். இதில் இருபாலினங்களிடையே பாலியல் உறவு நிகழ்கிறது.[9] The term straight is commonly used to refer to heterosexuals.[10] கலப்புப் பாலினர்களே பெரும்பான்மையான பாலியல் அடையாளமுள்ளவர்களாகும்.[10]

இருபாலினப் பாலுணர்வு ஆண், பெண் ஆகிய இருபால் கவர்ச்சி கொண்ட வகைமையாகும்.[9] or to more than one sex or gender.[11] இருபாலின பாலுணர்வு அடையாளம் ஒவ்வொரு பாலினத்தின் மீதும் சம அளவு கவர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; பொதுவாக, ஒருபாலினத்தைவிட மற்ற பாலினத்தின்பால் தனிச் சிறப்புக் கவர்ச்சி கொள்ளாதவர்களும் தம்மை இருபாலின அடையாளம் உள்ளவர்களாகக் கருதிக்கொள்கின்றனர்.[12]

ஒத்தபாலினப் பாலுணர்வு தன்னை ஒத்த பாலினத்தின்பால் கவர்ச்சி கொண்ட பாலுணர்வு வகைமையாகும்.[9] இலெசுபியர் எனும் சொல் ஒத்தபாலினக் கவர்ச்சி கொண்ட பெண்களைப் பொதுவாகக் குறிக்கிறது; மகிழ்நர் எனும் சொல் ஒத்தபாலினக் கவர்ச்சி கொண்ட ஆண்களைப் பொதுவாகக் குறித்தாலும் சிலவேளைகளில் ஒத்தபாலினப் பெண்களையும் குறிப்பதுண்டு.[13]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Reiter L (1989). "Sexual orientation, sexual identity, and the question of choice". Clinical Social Work Journal 17 (2): 138–50. doi:10.1007/BF00756141. https://archive.org/details/sim_clinical-social-work-journal_summer-1989_17_2/page/138. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Appropriate Therapeutic Responses to Sexual Orientation" (PDF). American Psychological Association. 2009. pp. 63, 86. பார்க்கப்பட்ட நாள் February 3, 2015. Sexual orientation identity—not sexual orientation—appears to change via psychotherapy, support groups, and life events.
  3. Dillon, F. R., Worthington, R. L., & Moradi, B. (2011). Sexual identity as a universal process In S. J. Schwartz, K. Luyckx, & V. L. Vignoles (Eds), Handbook of identity theory and research (Vols 1 and 2), (pp.649-670). New York, NY: Springer Science + Business Media
  4. Luyckx, K., Schwartz, S. J., Goossens, L., Beyers, W., & Missotten, L. (2011). Processes of personal identity formation and evaluation. In S. J. Schwartz, K. Luyckx, & V. L. Vignoles(Eds), Handbook of identity theory and research (Vols 1 and 2) (pp.77-98). New York, NY: Springer Science + Business Media
  5. Sinclair, Karen, About Whoever: The Social Imprint on Identity and Orientation, NY, 2013 ISBN 9780981450513
  6. Rosario, M.; Schrimshaw, E.; Hunter, J.; Braun, L. (2006). "Sexual identity development among lesbian, gay, and bisexual youths: Consistency and change over time". Journal of Sex Research 43 (1): 46–58. doi:10.1080/00224490609552298. பப்மெட்:16817067. 
  7. Ross, Michael W.; Essien, E. James; Williams, Mark L.; Fernandez-Esquer, Maria Eugenia. (2003). "Concordance Between Sexual Behavior and Sexual Identity in Street Outreach Samples of Four Racial/Ethnic Groups". Sexually Transmitted Diseases (American Sexually Transmitted Diseases Association) 30 (2): 110–113. doi:10.1097/00007435-200302000-00003. பப்மெட்:12567166. https://archive.org/details/sim_sexually-transmitted-diseases_2003-02_30_2/page/110. 
  8. 8.0 8.1 Laumann, Edward O. (1994). The Social Organization of Sexuality: Sexual Practices in the United States. University of Chicago Press. பக். 298–301. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226470207. https://books.google.com/?id=72AHO0rE2HoC&pg=PA4&lpg=PA4&dq=the+social+organization+of+sexuality+1990#PPA299,M1. 
  9. 9.0 9.1 9.2 "Sexual orientation, homosexuality and bisexuality". American Psychological Association. Archived from the original on August 8, 2013. பார்க்கப்பட்ட நாள் August 10, 2013.
  10. 10.0 10.1 Bailey, J. Michael; Vasey, Paul; Diamond, Lisa; Breedlove, S. Marc; Vilain, Eric; Epprecht, Marc (2016). "Sexual Orientation, Controversy, and Science". Psychological Science in the Public Interest 17 (2): 45–101. doi:10.1177/1529100616637616. பப்மெட்:27113562. https://www.researchgate.net/publication/301639075. 
  11. "Understanding Bisexuality". American Psychological Association. 2019. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
  12. Rosario, M.; Schrimshaw, E.; Hunter, J.; Braun, L. (2006). "Sexual identity development among lesbian, gay, and bisexual youths: Consistency and change over time". Journal of Sex Research 43 (1): 46–58. doi:10.1080/00224490609552298. பப்மெட்:16817067. 
  13. "GLAAD Media Reference Guide" (PDF). Archived (PDF) from the original on November 12, 2011. பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_அடையாளம்&oldid=3521265" இலிருந்து மீள்விக்கப்பட்டது