பாலிவினைல் புளோரைடு
பாலிவினைல் புளோரைடு (Polyvinylfluoride) என்பது (C2H3F)n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பலபடி சேர்மமாகும். விமானங்களின் உட்புறப்பூச்சில் தீப்பற்றுவதை குறைக்க உதவும் மேற்பூச்சாகவும், ஒளிமின்னழுத்தத் தொகுதியின் பின்புறங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. [2] மேலும் மழை ஆடைகள் மற்றும் உலோகத் தகடுகள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. பாலி வினைல் புளோரைடானது வெப்ப நெகிழி வினைல் புளோரைடு அலகின் ஒரு புளோரோ பலபடியாகும். பாலி வினைல் குளோரைடை ஒத்த இதன் கட்டமைப்பில் வினைல் புளோரைடு அலகு மீண்டும் மீண்டும் இடம் பெறுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாலி(1-புளோரோயெத்திலீன் [1]
| |
வேறு பெயர்கள்
பாலி(வினைல் புளோரைடு)
| |
இனங்காட்டிகள் | |
24981-14-4 | |
Abbreviations | PVF |
ChEBI | CHEBI:53244 |
ChemSpider | ஏதுமில்லை |
ம.பா.த | பாலிவினைல்+புளோரைடு |
பண்புகள் | |
(C2H3F)n | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நீராவிகளுக்கு குறைந்த ஊடுருவலைக் கொண்டுள்ள பாலிவினைல் புளோரைடு மிக மெதுவாக எரியும். மேலும் வானிலை மற்றும் கறைகளுக்கு சிறந்த எதிர்ப்பைக் கொண்டுள்ளது. வானிலை காரணிகளால் இது படிப்படியாகச் சிதைவடையாது. கறையும் படியாது. கீட்டோன்கள் மற்றும் எசுத்தர்கள் தவிர, பெரும்பாலான வேதிப்பொருள்களுக்கும் இச்சேர்மம் எதிர்ப்புத் திறன் மிக்கதாக உள்ளது. பல்வேறு இறுதிப் பயன்பாடுகளுக்கான பல்வேறு வண்ணங்கள் மற்றும் வாய்ப்பாடுகளில் மென் படலமாகவும், சிறப்பு பூச்சுகளுக்கான பிசினாகவும் பாலி வினைல்புளோரைடு கிடைக்கிறது. போதுமான வெப்ப நிலைத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதால் வழக்கமாக இது வணிக ரீதியாக மென்படல தயாரிப்பாகவே கிடைக்கிறது.
தொடர்புடைய சேர்மங்கள்
தொகு- வினைல் புளோரைடு
- பாலிவைனைல் குளோரைடு
- பாலிவினைலிடின் புளோரைடு
- டெஃப்லான்
மேற்கோள்கள்
தொகு- ↑ "poly(vinyl fluoride) (CHEBI:53244)". பார்க்கப்பட்ட நாள் July 14, 2012.
- ↑ "Tedlar PVF". Archived from the original on 2014-02-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.