பாலி வினைல் தொலுயீன்
பாலி வினைல் தொலுயீன் (polyvinyl toluene) [CH2CH(C6H4CH3)]n என்ற நேர்க்கோட்டு மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது அல்கைல் பென்சீன் சேர்மத்தின் ஒரு செயற்கை பலபடியாகக் கருதப்படுகிறது. வியாபார பாலி வினைல் டொலுவீன் மெத்தில் இசுடைரின் சமபகுதியத்தின் கலவை வர்த்தக ரீதியிலான வினைல் தொலுயீனாகும்.[1]
-
பாலி வினைல் தொலுயீனின் வேதி வாய்ப்பாடு
பயன்கள்
தொகுஆந்திரசீன் அல்லது அலைநீளத்தை மாற்றக்கூடிய வேறு எந்த மாசுப்பொருளுடனும் நெகிழி மின்மினுப்புக்காக பாலி வினைல் தொலுயீனை மாசுப்பொருளாக சேர்த்துக் கொள்ள முடியும்.[2] துகள் கதிர்வீச்சு மற்றும் காமா கதிர்வீச்சு ஆகிய இரண்டு அயனியாக்கும் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படும் போதும் உமிழப்படும் புலப்படும் கதிர்வீச்சின் அளவு உறிஞ்சப்பட்ட அளவுக்கு விகிதாசாரமாக இருக்கும். நீள விகிதத்திற்கு ஏற்படும் ஆற்றல் இழப்பு மிக அதிகமாக இல்லை. ஓர் அலகு நீளத்திற்கு ஏற்படும் ஆற்றல் இழப்புக்கான பரவலான மதிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு தொடர்பு பிர்க்சு விதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக நிறுத்தும் சக்தி கொண்ட கதிர்வீச்சினால் பாலி வினைல் தொலுயீன் தமடையலாம். அயனி கற்றைகள் அல்லது எந்த வகையான அயனியாக்கும் கதிர்வீச்சையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். பாலி வினைல் தொலுயீன் மற்றும் பிற ஒத்த நெகிழி மினுமினுப்புகளுக்கான கதிர்வீச்சு சேதத்தின் மதிப்பாய்வை இங்கு காணலாம்.[3] இத்தகைய கதிர்வீச்சு C-H பிணைப்புகளை உடைத்து, ஒளியை உறிஞ்சும் வண்ண மையங்களை உருவாக்குகிறது. ஒளி வெளியீட்டையும் கணிசமாகக் குறைக்கிறது.[4]
2022 ஆம் ஆண்டு வரையிலான வினைல் பொருள்களின் பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்ததைத் தொடர்ந்து வினைல் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் வழக்கமான மற்றும் வரலாற்றுப் பொருளான பாலி வினைல் குளோரைடுக்கு மாற்றாக பாலி வினைல் தொலுயீன் பார்க்கப்படுகிறது. பாலி வினைல் குளோரைடைக் காட்டிலும் சுற்றுச் சூழலுக்கு இணக்கமானதாகவும் இது பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Birks, J.B. (1964). The Theory and Practice of Scintillation Counting. London: Pergamon.
- ↑ Birks, J.B. (1964). The Theory and Practice of Scintillation Counting. London: Pergamon.
- ↑ Sauli, F. (1993). Instrumentation in High Energy Physics (2nd ed.). World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-02-0597-3.
- ↑ Bross, A. (1992). "Radiation damage of plastic scintillators". IEEE Trans. Nucl. Sci. 39: 1199. doi:10.1109/23.173178.