பாலே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாலே (Ballet) என்பது இத்தாலியப் புரட்சியின் போது உருவான நடனம் ஆகும். பின்னர், பிரான்சு, ரசியா ஆகிய நாடுகளில் பரவலான நடனம் ஆகியது. பிரெஞ்சு கலைச்சொற்களை உள்ளடக்கி, நாட்டிய அமைப்பும் மேம்படுத்தப்பட்டது. உலகளவில் செல்வாக்கு பெற்ற இந்த நடனம் வேறு பல நடனங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
சொற்பொருள்
தொகுபாலெட் என்ற சொல் "βαλλίζω (குதித்தல்/ தாவுதல்)" என்ற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்தது. இது லத்தீனில் பல்லாரே எனவும் இத்தாலிய மொழியில் பாலெட்டோ என்றும் பின்னர் பிரெஞ்சு மொழியைச் சென்றடைந்தது. இதுவே பின்னர் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டது.