பாலையக் கோட்டை
இந்தியா, தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் பாலையக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் ஆறுகள், குளங்கள், நெல் மற்றும் வாழை ஆகியவை விளையும் வயல்வெளிகள் ஆகியவற்றால் சூழ்ந்துள்ளது. வடக்கு தெரு, தெற்கு தெரு, நடுத் தெரு, மேலத் தெரு, முதன்மை சாலைத் தெரு போன்ற தெருக்கள் இதில் உள்ளன. அனைத்துத் தெருக்களும் ஆற்றுப் படுகையை முடிவாகக் கொண்டிருப்பது இக்கிராமத்தின் சிறப்பாகும். இதன் வடபகுதியில் அருகில் மன்னார்குடி நகரமும் மேற்கில் திருமக்கோட்டை கிராமமும் காணப்படுகின்றன. இக் கிராம மக்கள் உலகளவில் பரவி அந்நிய செலாவணியை ஈட்டுபவர்களாக உள்ளனர். குடும்பத்திற்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுள் அதிகம்பேர் சிங்கப்பூரில் உள்ளனர். ஆகவே, இந்தக் கிராமம் ' ' ' குட்டி சிங்கப்பூர் ' ' ' என்று அழைக்கப்படுகிறது.