பாலை (திரைப்படம்)

செந்தமிழன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாலை சங்ககாலத் தமிழர் வாழ்வை பற்றி கூறும் ஒரு திரைப்படம் ஆகும். இது செந்தமிழன் இயக்கி 2010ல் வெளிவந்தது. இதில் நடித்த சம்மு என்னும் நாயகியை தவிர்த்து மற்ற அனைவரும் இந்த திரைப்படத்திலேயே அறிமுகமாகினர்.

பாலை
எளியோர் செய்த போர்
இயக்கம்செந்தமிழன்
தயாரிப்புதி. இரவி
மூலக்கதைகாயாம்பூ என்ற பெண் எழுதிய ஓலைச்சுவடி
திரைக்கதைசெந்தமிழன்
இசைவேத் ஷங்கர்
ஒளிப்பதிவுஅபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்புச. ரிச்சர்ட்
விநியோகம்செம்மை நிறுவனம்
வெளியீடு2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர். அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும் கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வறட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். தற்போது முல்லைக்கொடி தமிழர்களிடம் ஆயுதங்களும் கிடையாது. படை பலமும் கிடையாது. ஆனால் ஆயக்குடியை களவாடிய வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டத்திடம் ஆயுதங்கள் பலவும் படைபலமும் உண்டு. அதனால் முல்லைக்கொடி தலைவன் ஆயக்குடி நோக்கி போர் சரியான முறையில் போர் தொடுக்க வேண்டும் என்று முல்லைக்கொடி மக்களிடம் கூறுகிறார். அதற்கு பாலை முதுவன் இணங்க மறுத்து சரியான முறைப்போர் சரியானவர்களிடம் தான் தொடுக்க வேண்டும். இணக்கம் பேசுவதாக கூறி முதுகில் குத்திய வந்தேறி கூட்டத்திடம் சூதுடன் தான் போர் தொடுக்க வேண்டும் என்று தலைவனையும் மக்களையும் எச்சரித்து அதற்கான திட்டத்தையும் பயிற்சியையும் அளிக்கிறார்.

அத்திட்டத்தின் படி முல்லைக்கொடி மக்கள் தங்கள் மக்களில் யாரையும் இழக்காமல் வளனையும் மீட்கின்றனர். ஆயக்குடி வந்தேறிகளின் ஆநிரைகளை கவர்கின்றனர். இறுதியான போரில் ஆயக்குடி வந்தேறிகள் அனைவரும் அழிய முல்லைக்கொடி தமிழர்களின் தலைவனும் வந்தேறிகளின் தலைவனும் மட்டும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் தப்பித்த சில முல்லைக்கொடி மக்கள் ஆயக்குடியில் மீண்டும் வாழ்கின்ற்னர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலை_(திரைப்படம்)&oldid=4167803" இலிருந்து மீள்விக்கப்பட்டது