பால்குறி நிறப்புரி

பால்குறி நிறப்புரி அல்லது இலிங்க நிறமூர்த்தம் (Allosome or sex chromosome) எனப்படுவது தன்நிறப்புரியில் இருந்து வேறுபட்ட நிறப்புரியாகும். மனிதரை எடுத்துக் கொண்டால், 22 சோடி தன்நிறப்புரிகளும், ஆண், பெண் வேறுபாட்டைத் தீர்மானிக்கும் ஒரு சோடி பால்குறி நிறப்புரிகளும் காணப்படுகின்றன. பால்குறி நிறப்புரிகளை X, Y என்ற ஆங்கில எழுத்துக்கள் மூலம் குறிப்பிடுவர். பெண்களில் இரு X நிறப்புரிகளும் (அதாவது XX), ஆண்களில் ஒரு X உம் ஒரு Y உம் சேர்ந்து XY என்ற நிறப்புரி சோடியும் காணப்படுகின்றன.

மனிதரில் உள்ள நிறப்புரிகள்
பெண் ஆண்
ஆணிலும், பெண்ணிலும் ஒவ்வொரு தன்நிறப்புரியிலும் இரு பிரதிகள் இருக்கும். அவை 1-22 நிறப்புரிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. 23 ஆவது நிறப்புரி பால்குறி நிறப்புரியாக இருப்பதுடன் ஆணிலும், பெண்ணிலும் வெவ்வேறாக இருக்கும். பெண்ணில் இரு பிரதிகளைக் கொண்ட X நிறப்புரியும், ஆணில் தனியான ஒரு X நிறப்புரியும், தனியான ஒரு Y நிறப்புரியும் காணப்படும்.

அசாதாரண நிலைகளில் XYY, XXY, XXX, XXXX, XXXXX, XXYY போன்ற பல இணைவுகள் காணப்படும். இவை மரபியல் சீர்குலைவுகளாகக் கண்டறியப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்குறி_நிறப்புரி&oldid=2624601" இலிருந்து மீள்விக்கப்பட்டது