பால்கெழுக்கிளவி
பால்கெழுக்கிளவி தொல்காப்பியர்[தொடர்பிழந்த இணைப்பு] வெளிபடு பொருளே கிளத்தல் வேண்டா என்று உரியியலில் கூறுகிறார். பொருளியலில் வெளிப்படு பொருளின்றிப் பிறவாறு வருவனவற்றையே கிளந்தாராதல் எனக் கொள்ளுதல் முறைமைத்தாகும்.
வரையறை
தொகுஇளம்பூரனார் பால்கெழுக்கிளவிக்கு பயிலாது வரும் ஒரு கூற்றுச்சொல் என்பார். நச்சினார்க்கினியர் நெஞ்சு என்னும் அஃறிணை ஒருமையை விளக்க தலைவன் கூறும் வழி உயர்திணை ஆண்பாலாகவும், தலைவி கூறும் வழி உயர்திணை பெண்பாலாகவும், பன்மையால் கூறும் வழி பலர்பாலாகவும் கொள்ளப்படும் என்பார். இதனைத் தொல்காப்பியர்
"ஒருபாற் கிளவி ஏனைப் பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிய"
என்னும் நூற்பாவில் பால்கெழு கிளவியை வழக்கிற்குரியதாக
"உண்டற்குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே"
என்ற நூற்பாவில் நிலைபேறுடைய வழக்காகிய மரபிற்கு உரியதாகக் கூறுவர்.
வழுவும், வழுவமைதியும்
தொகுஒரு பாலுக்கோ, ஒரு திணைக்கோ உரியதை வேறு பாலுக்கோ, வேறு திணைக்கோ உரியதாக்கல் நடையியலார் நிலைமாற்றம் எனக் கூறுவர். இதனைத் தொல்காப்பியர்வழி பால்கெழுக்கிளவி நிலைமாற்றம் எனக் கருதுவது பொருத்தமாகும்.
ஆளுருவாக்கம்[தொடர்பிழந்த இணைப்பு] என்பது நிலைமாற்றம் அல்லது பால்கெழுக் கிளவியின் ஒரு பகுதியாகும்.
உவமவாயிற் படுத்தல்
தொகுமேனாட்டார் ஆளுருவாக்கத்தை உருவகத்தோடு தொடர்புடைய ஒர் அணியாகக் கொள்வர். பால்கெழுக்கிளவியும் உருவகத்தோடு தொடர்புடையதே. தொல்காப்பியருக்கு உருவகம் பற்றிய கருத்து இருந்தது என்பதை உணரலாம்.
பால்கெழுக்கிளவியின் வகைகள்
தொகுதொல்காப்பியர் குறிப்பிடும் அகப்பொருள் வழக்காறுகள் பால்கெழுக்கிளவியாக வரும்.
இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமான காம மரபு புலப்படுமாறும் எட்டுவகை மெய்ப்பாடும் விளங்குமாறும் உறுப்புடையது போலவும், உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும், நெஞ்சினை முன்னிறுத்தி மொழிதல் (பொருள் ) மற்றும் ஒருசிறை நெஞ்சமோடு உசாவுதல் (பொருள் 10)சொல்லாதவற்றைச் சொல்லுந போலவும், செய்யாதவற்றைச் செய்வன போலவும் கூறுதல் பால்கெழு குளவியாம். இஃது அகம் புறம் இரண்டற்கும் பொதுவாதல் பற்றி இதனை எச்சவியலிலும் குறிப்பிட்டுள்ளார்.
சொல்லா மரபினவற்றைத் தம் நோய்க்கு வருந்தின போலக் கூறுதல் (பொருளியல் - 2)
கனவைப் பால்கெழு கிளவி கூறற்கு உரியதாக்குதல் (பொருளியல் - 3)
புலம்புறு காலத்தில் தலைவி உறுப்பினை உணர்ந்தன போலக் கூறுதல் (பொருளியல் - 8)
உடம்பும் உயிரும் வாடியபோது இவை என்னுற்றன எனல் (பொருளியல் - 9)
உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறுதல் (காட்டு : பசலை உண்டது)(பொருளியல் - 19)
மேற்கோள்கள்
தொகு1. தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை
2. தொல்காப்பியம் - நச்சினார்க்கினியர் உரை