பால்க்பீர் எதிர்பலியாட்டம்

சதுரங்கத் திறப்பாட்டம்

பால்க்பீர் எதிர்பலியாட்டம் (Falkbeer Countergambit) என்பது கீழ்கண்ட நகர்வுகளுடன் தொடங்கும் சதுரங்கத் திறப்பாட்டத்தைக் குறிக்கும். ராசாவின் பலியாட்டம் என்ற சதுரங்கத் திறப்பாட்டத்தின் ஒரு மாறுபாடு பால்க்பீர் எதிர்பலியாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

Falkbeer Countergambit
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
d5 black pawn
e5 black pawn
e4 white pawn
f4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
பெயரிடப்பட்டது எர்னசுட்டு பால்க்பீர்
மூலம் ராசாவின் பலியாட்டம்
Chessgames.com opening explorer

:1. e4 e5

:2. f4 d5

கருப்பு இந்த ஆக்ரோசமான எதிர்பலி ஆட்டத்தில் வெள்ளை கொடுத்த பலியை அலட்சியப்படுத்துகிறது. மாறாக வெள்ளை ராசாவின் பக்கத்தில் ஏற்பட்டுள்ள பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மையத்தை திறக்கிறது. 3.exd5, என்ற வெள்ளையின் வழக்கமான அடித்தல் நகர்வுக்குப் பின்னர் கருப்பும் 3...exf4, என்று அடித்து விளையாடுகிறது. இதனால் ஆட்டம் ராசாவின் பலியை ஏற்றுக் கொள்ளும் 3...e4 அல்லது தற்கால நவீனப் பார்வை நகர்வான 3...c6. திறப்புக்கு ஆட்டம் திரும்புகிறது.

வெள்ளை 3.fxe5??, என்று விளையாடுவது நன்கு அறியப்பட்ட ஒரு தவறான நகர்வாகும். பின்னர் கருப்பு 3...Qh4+ என விளையாடி கூடுதலாக ஒரு சிப்பாயை எடுத்துக் கொள்ளமுடியும். 4.g3 என்று விளையாடினால் Qxe4+ என விளையாடி ஒரே நேரத்தில் வெள்ளை ராசா மற்றும் யானைக்கு இரட்டைத் தாக்குதல் கொடுக்கலாம். 4.g3 நகர்வுக்குப் பதிலாக வெள்ளை 4.Ke2 என்று நகர்த்தினால் கருப்பு 4….Qxe4+ 5.Kf2 Bc5+ என்று விளையாடி வெள்ளைக்கு தொடர் தாக்குதல் கொடுக்க ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இத்திறப்பை ஆத்திரிய சதுரங்க மாசுட்டர் எர்னசுட்டு பால்க்பீர், 1851 ஆம் ஆண்டு அடோல்ப் ஆண்டர்சனுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்[1].முதன்முதலில் விளையாடியவரின் பெயராலேயே இத்திறப்பு பால்க்பீர் திறப்பு என்று அழைக்கப்படுகிறது. சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக்களஞ்சியம் சி31 மற்றும் சி32 என்ற குறியீடுகளால் இத்திறப்பை அடையாளப்படுத்துகிறது.

3…e4 நகர்வு வரிசை

தொகு

இழக்கப்படும் சிப்பாய்க்குப் பதிலாக இத்திறப்பில் கருப்புக்கு வேகமாக காய்களை முன்னேற்றும் வாய்ப்பு அமைகிறது. விரைவாகவே வெளிப்படும் வெள்ளை ராசாவை நோக்கி ஆட்டத்தை அழைத்துச் செல்ல கருப்புக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 4.d3 Nf6 5.dxe4 Nxe4 6.Nf3 Bc5, பலவீனமான f2 சதுரத்தை உருவாக்க கருப்பு முயல்கிறது. 1923 ஆம் ஆண்டு மேயிரிச்சு ஒசுட்ரௌ நகரத்தில் நடைபெற்ற மேயிரிச்சு சதுரங்கப் போட்டியின் ருடோல்ப்பு சிபீல்மான் எதிர் சீக்பெர்ட் தாரச்சு ஆட்டத்தில் மேற்கண்ட நகர்வின் தொடர்ச்சி இவ்வாறு அமைந்தது: 7.Qe2 Bf5 (1917 புடாபெசுட்டு போட்டியில் ரீட்டி-பிரேயர் ஆட்டத்தில் கருப்பு 7...f5 8.Nfd2 Bf2+ 9.Kd1 Qxd5 10.Nc3 என்று விளையாடினார்.) 8.g4?! ( 8.Nc3 ஆடலாம் என புரூடண்ட்டு பின்னர் தெரிவித்தார்) 8...0-0! 9.gxf5 Re8 என்ற நகர்வுகளால் கருப்புக்கு நல்ல ஆட்டம் அமைகிறது[2].

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இவ்வரிசையில் அமையும் ஆட்டங்கள் குறைந்து போயின. கருப்பு ஆட்டக்காரருக்கும் சிக்கல்கள் உருவாகத் தொடங்கின, விர்ர்கள் அடுத்த யுக்திக்கு திரும்பினர்.

3…c6 நிம்சோவிச்சு எதிர்பலியாட்டம்

தொகு

3.exd5 என்று வெள்ளை வழக்கமான அடித்தல் நகர்வை ஆடியவுடன் 3…c6 என்று நகர்த்தி விளையாடுவது இப்போது ஒரு பொதுவான நகர்வாக மாறிப்போனது என்று யான் நன் குறிப்பிடுகிறார். 1906 ஆம் ஆண்டு மூனிச்சில் நடைபெற்ற ஆரோன் நிம்சோவிச்சு இந்த நகர்வை விளையாடுவதை தொடங்கி வைத்தார்[3]. சிபீல்மான் எதிர் நிம்சோவிச்சு ஆட்டத்தில் இந்த நகர்வு விளையாடப்பட்டது. ஆனால் 1905 ஆம் ஆண்டிலேயே பிராங்க் மார்சல் இந்த நகர்வின் மூலம் விளையாடி 34 நகர்வுகளில் ரிச்சர்டு டெய்ச்சுமானை தோற்கடித்திருந்தார்[4][5]. 1914 ஆம் ஆண்டு மார்சல் தன்னுடைய புத்தகம் ஒன்றில் 3...c6 நகர்வு ஒரு புதிய கண்டுபிடிப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்[6] கருப்புநிற காய்களுடன் விளையாடிய மேற்குறிப்பிட்ட இருவரும் அந்த ஆட்டங்களை வென்றார்கள் என்றாலும் 3 ... c6 என்ற நகர்வு பல ஆண்டுகளுக்கு முதிர்ச்சியடையாமல் இருந்தது.

4.Qe2 என்று நகர்த்தி வெள்ளை இந்த எதிர்பலி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியும். 1911 இல் அலெக்சாண்டர் அலெக்கின் மற்றும் பால்யானர் ஆட்டத்தில் வெள்ளைக்கு வெற்றியும் கிட்டியது. இருப்பினும் 4.Nc3 exf4 பொதுவான நகர்த்தல்கள் என்ற நிலையை அடைந்தன. உருவாகும் காய்களின் நிலை ராசாவின் பலியாட்ட ஏற்பை எதிர்கொள்ளும் நவீனவகை தடுப்பாட்டத்தில் தோன்றும் நிலையை ஒத்ததாக அமைகிறது. 4-2 சிப்பாய் என்ற ராணியின் பக்க பெரும்பான்மையை பயன்படுத்திக் கொள்ள, தனது ராசாவுக்கு எதிராக கருப்பு காய்களின் நடவடிக்கைகளை மேற்கோள்வதற்காக உருவாக்கப்பட்ட f4 சிப்பாயின் செயலிழப்புடன் வெள்ளை பாடுபடுகிறது. இக்கோட்பாடு ஒரு உறுதியான முடிவைத் தரவில்லை என்றாலும் இதன் விளைவாக அமையும் நிலைகள் 3 ... e4 விட என விளையாடுவதை விட 3…c6 என நகர்த்துவது இன்னும் சிறப்பான ஆட்டம் அமையும் வாய்ப்புகளைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு