பால்யகாலசகி

மலையாள எழுத்தாளரான முகம்மது பஷீர் எழுதிய புதினம்

பால்யகாலசகி (Palyakalasaki) என்பது மலையாள எழுத்தாளரான முகம்மது பஷீர் எழுதிய புதினம் ஆகும். இதனை மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுப் என்பவர் மொழிப் பெயர்த்துள்ளார். தோல்வியடைந்த காதலின் கதையான இதில், பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும், இசுலாமியப் பின்புலமும் உள்ளதாக அமைந்துள்ளது.[1]

பால்யகாலசகி
Balyakalasakhi
நூலாசிரியர்முகம்மது பஷீர்
உண்மையான தலைப்புബാല്യകാലസഖി
மொழிபெயர்ப்பாளர்குளச்சல் யூசுப்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்டி. சி. புத்தகம்
வெளியிடப்பட்ட நாள்
1944
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்96
ISBN978-8171300099

பால்ய காலத்தில் சிநேகம், பிரேமம், காதல் போன்ற உணர்வுகள் ஓரு குறிப்பிட்ட நபர் மீது ஏற்படுகிறது. ஒளிந்துகொண்டிருக்கும் அக்காதலை எண்ணி அசைபோடும்போது, வாழ்வின் உன்னதத்தை, மகத்துவத்தை, மகிழ்ச்சியை, ஏமாற்றத்தை, பெருவலியை தருவது உளவியல். மஜீது - சுகறா இவ்விருவர்களின் பால்யகால காதல் வாழ்க்கையும், காதல் பிரிவும் இக்கதையில் இடம் பெறுகிறது.

கதைச் சுருக்கம்

தொகு

மஜீது – சுகறா – இவ்விருவர்களின் பால்யகால சேட்டைகள், பள்ளி வாழ்க்கை, தோட்ட வேலைகள், செடி நடுதல், மரமேறி மாம்பழம் பறித்தல் இவற்றிலிருந்து தொடங்குகிறது இவர்களின் கதை. பணக்கார வீட்டுப் பையனான மஜீதுக்கும் ஏழை வெற்றிலை வியாபாரியின் மகள் சுகறாவிற்குமான பால்யகால நட்பு, காதலாக இளம்பருவத்தில் மாறுகிறது. இந்த சமயத்தில் சுகறாவின் தந்தை இறந்துப்போகிறார். சுகறாவின் கனவுகள் சிதறடிக்கப்பட்டன. மஜீது தந்தை மீது உள்ள கோபத்தில் தேசாந்திரியாக திரிகிறான். பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வரும் மஜீதுக்கு பேரதிர்ச்சியாக, பணக்கார குடும்பம் கடன் காரணமாக ஏழ்மையானதை காண்கிறன். திருமண வயதை கடந்த இரு தங்கைகள், உடல்நிலை சரியில்லாத தந்தை, இதை விட கொடுமை தான் காதலித்த சுகறாவுக்கு திருமணம் ஆகிவிடுகிறது.

வாழ்க்கை சரிவர அமையாததால் வாழ்ந்த வீட்டிற்கு திரும்ப வந்துவிடுகிறான் சுகறா.

சுகாறாவை திருமணம் செய்ய மஜீத்துக்கு ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலை, இரு தங்கைகள் திருமணம், தந்தை உடல்நிலை, இது அனைத்தும் சரியான பிறகு திருமணம் செய்துகொள் என மஜீது தாய் கூறிவிடுகிறார். எனவே வெளியூருக்கு வேலைக்கு செல்கிறான் மஜீது. புறப்படும் போது சுகறாவிடம் தன் வீட்டுப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறும் போது சுகறா மஜீதிடம் ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாள் அதற்குள் பேருந்து புறப்பட்டு விட்டது . வெளியூரில் வேலைசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மஜீது தனது வலது காலை இழக்கிறான். அதனால் அவனது வேலை பறிபோனது . இறுதியாக ஒற்றைக் காலோடு ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறான். ஒருநாள் காலை வேளையில் வீட்டில் இருந்து கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் சுகறா இறந்துவிட்டதாக தகவல் வகிறது. அக்கடிதத்தை வாசிக்கும் போது உலகமே அமைதியாக மாறிவிட்டது போல இருந்தது. தனது வாழ்க்கையே முடிந்து விட்டது போல எண்ணுகிறான். பின்பு தனது குடும்பம் தன்னை நம்பி உள்ளதை உணர்ந்து. தன் வாழ்க்கையே தொடருகிறான் மஜீது. "சுகறா கடைசியாக சொல்ல நினைத்தது எதுவாக இருக்கும்?" என்ற மஜீதின் எண்ணத்தோடு கதை முடிகிறது.

திரைப்படங்கள்

தொகு

இந்தப் புதினத்தினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்

  • பால்யகாலசகி (1967) பிரேம் நசீர் மஜீத்தாகவும் ஷீலா சுகாறாவாகவும் நடிக்க, ஜெ. சசிகுமார் இயக்குநர்.
  • பால்யகாலசகி (2014) மம்மூட்டி மஜீத்தாகவும் இஷா தல்வார் சுகாறாவாகவும் நடிக்க, புரமீத் பையானூர் இயக்கியத் திரைப்படம்.

மேற்கோள்கள்  

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்யகாலசகி&oldid=4162292" இலிருந்து மீள்விக்கப்பட்டது