பால் எடுவார் பாசி

பால் எடுவார் பாசி (1859-1940), என்னும் பிரான்சிய நாட்டினர் பன்னாட்டு ஒலிப்பியல் குழுமம் என்னும் நிறுவனத்தை 1886 இல் நிறுவியவர்.[1] அப்பொழுது அதனை இவர் Dhi Fonètik Tîtcerz' Asóciécon ( FTA) (தி ஃவோனெட்டிக் டீச்சர்சு அசோசியேசன்) என்று அழைத்தார். இவருடைய தந்தை பெடரிக் பாசி அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர் முன்னேற்ற அரசியல் சிந்தனைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இந்த அனைத்துலக ஒலியனியல் குழுமம்தான் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி என்னும் அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கை முதலில் உருவாக்கி வெளியிட்டது. பால் எடுவார் பாசி, 1906 இல் குமுகநோக்கு கிறித்தவர்களின் ஒன்றியம் என்னும் அமைப்பை நிறுவுவதில் பங்குகொண்டார். 1909 இல் பிரான்சின் வடகிழக்கே உள்ள ஓபி (Aube) என்னும் பகுதியில் உள்ள வோண்ட்டெட் என்னும் குடியிருப்புப் பகுதியில் புகழ்பெற்ற “விடுதலை, ஒக்குமை, தோழமை” என்னும் முச்சொல் முழக்கவுரையை உருவாக்கினார்.[2] இந்த முச்சொல் முழக்கவுரை பிரான்சியப் புரட்சி நாட்களில் உருவாகி இன்று பிரான்சு நாட்டின் குறிக்கோள் முழக்கமாக வீற்றிருக்கின்றது.

1901இல் பால் எடுவார் பாசி

1896 ஆம் ஆண்டில், இவர் சோர்போனில் விரிவுரைகள் மற்றும் நடைமுறை ஒலிப்பு வகுப்புகளை வழங்கத் தொடங்கினார். அங்கு தனது வகுப்புகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதல் ஆசிரியர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Passy biography".
  2. Collins, Beverley; Mees, Inger M. (1999). The Real Professor Higgins: The Life and Career of Daniel Jones. Mouton de Gruyter. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-015124-3.
  3. "Passy biography".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_எடுவார்_பாசி&oldid=4117086" இலிருந்து மீள்விக்கப்பட்டது