பாவனா கவுடா

இந்திய நடிகை

பாவனா கவுடா (பிறப்பு 2 ஜூன் 1991), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவைச் சேர்ந்த கன்னடம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு நடிகை ஆவார்.கொம்பேகலா லவ் (2013) என்ற படத்தில் அறிமுகமான இவர், டொட்டு மதிகே (2022) மற்றும் விந்தியா வெர்டிக்ட் விக்டிம் வி3 (2023) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாவனா கவுடா
பிறப்பு2 ஜூன்1991
மண்டியா, கருநாடகம்
பணிதிரைப்பட நடிகை, விளம்பரப்பெண்
செயற்பாட்டுக்
காலம்
2013ம் ஆண்டு முதல்

திரைப்பட வாழ்க்கை

தொகு

பாவனா, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட காதல் திரைப்படமான கொம்பேகலா லவ் (2013) இல் உடலுறுப்பு செயலிழந்த ஒரு பெண்ணாக, வித்தியாசமான பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். படுத்த படுக்கையில் இருக்கும் இன்னொரு ஆணைத் திருமணம் செய்வதும் இப்படத்தின் காட்சியாகும். அதைத்தொடர்ந்து பல்வேறு கன்னட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார், ஜாட்டா (2013) மற்றும் கன்னடிகா (2021) போன்ற படங்கள் இதில் குறிப்பிடத்தகுந்தது. இவற்றில் நடிகர்ரவிச்சந்திரனுக்கு இணையான கதாநாயகியாக நடித்துள்ளார். 2023 ம் ஆண்டில் வெளியான, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் V3 (2023) என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார் [1]

2018 ஆம் ஆண்டில், பாவனா கன்னட இயக்குனரான, பாடிகர் தேவேந்திராவின் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படமான ருத்ரியில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், பாவனாவுக்கான சிறந்த நடிகை உட்பட சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் 2023 ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது [2] மைசூர் டைரிஸ், பிரபுத்வா, கார்க்கி, கலிவீர, மெகபூபா மற்றும் ஃபைட்டர் ஆகியவை இவர் நடித்து, இன்னும் வெளிவராமல் இருக்கும் படங்களாகும்.[3][4]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2013 கோம்பேகல காதல் கமலா கன்னடம் சிம்மா சிறந்த கன்னட பெண் அறிமுக விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது
ஜட்டா பெல்லி கன்னடம்
2015 ஜாக்சன் குமுதா கன்னடம்
அடகர அனு கன்னடம் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது-கன்னடம் க்காக பரிந்துரைக்கப்பட்டது
2017 சாமக் கன்னடம்
2018 வெண்ணிலா கன்னடம்
2021 கன்னடிகா குணபத்ராவின் மனைவி கன்னடம்
2022 தூது மடிகே பரிமளா கன்னடம்
சாது விச்சாரனே நாதியுடைத்தே ஜனனி கன்னடம்
2023 விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3 விந்தியா தமிழ்
கார்க்கி கன்னடம் தயாரிப்பிலுள்ளது
ருத்ரி கன்னடம் தயாரிப்பிலுள்ளது

மேற்கோள்கள்

தொகு
  1. "Varalaxmi Sarathkumar's 'V3' trailer - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2023-01-24.
  2. "Pavana Gowda as Rudri bags the prestigious VIFFMP best actress award". www.telegraphindia.com. Retrieved 2023-01-24.
  3. "I've finally got the stamp of a glamorous heroine, says actress Pavana gowda". The New Indian Express. Retrieved 2023-01-24.
  4. "Pavana Gowda to collaborate with Rudri team for second time". The New Indian Express. Retrieved 2023-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா_கவுடா&oldid=4169500" இலிருந்து மீள்விக்கப்பட்டது