பிஎச்ஐஎம் அல்லது பீம் (BHIM) என்பது இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கைபேசி செயலியாகும். இந்த செயலியின் பயன்பாடு ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகத்துக்கு (UPI) மேலே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் பணமில்லா பொருளாதாரம் ஊக்குவிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடை முகத்தை செயல்முறையைப் பயன்படுத்தும் எந்த ஒரு வங்கிக்கும் பணம் செலுத்த இயலும்.

பிஎச்ஐஎம் (BHIM)
உருவாக்குனர்இந்தியத்_தேசிய_கொடுக்கல்கள்_நிறுவனம்
தொடக்க வெளியீடு30 திசம்பர் 2016; 7 ஆண்டுகள் முன்னர் (2016-12-30)
இயக்கு முறைமை
  • ஆண்ட்ராய்டு
  • ஐஓஸ்
மென்பொருள் வகைமைமொபைல் செயலி
இணையத்தளம்https://www.bhimupi.org.in

மின்னணுவியல் பணப்பை (Digital Wallet) நிறுவனங்கள் ஏற்கனவே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ பணம் அனுப்பும் செயல்முறையை கொண்டிருந்தாலும், பீம் செயலி அவற்றில் இருந்து சற்று மாறுபட்டது. மின்னணுவியல் பணப்பை (Digital Wallet) பயன்படுத்த முன்னரே பணத்தை அச்செயலியில் ஏற்றிவைக்க வேண்டும். ஆனால் பீம் செயலியைக் கொண்டு ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொன்றுக்கு நேரடியாக அதுவும் உடனடியாக பணத்தை அனுப்பமுடியும். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.bhimupi.org.in/what-we-do
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஎச்ஐஎம்&oldid=3501197" இலிருந்து மீள்விக்கப்பட்டது