பிகாரி லால் யாதவ்

குரு பிகாரி என்றும் அழைக்கப்படும் பிகாரி லால் யாதவ் (Bihari Lal Yadav) (1857-1926), போச்புரி எழுத்தாளர், கவிஞர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நவீன பிரஹா நாட்டுப்புற இசையின் தோற்றுனர் என்றும் அறியப்படுகிறார். இதன் பழைய வகை காரி பிர்ஹா என்று அழைக்கப்படுகிறது. [1] [2] இவர் ஒரு இசைக்கருவியைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், இது கர்தலின் மறுபதிப்பாக இருந்தது. இந்தக் கருவியை பிகாகாவில் அறிமுகப்படுத்தவும் செய்தார். இவர் பிரகாவை எழுதி அதை வாரணாசி போன்ற நகரங்களில் பிரபலப்படுத்தவும் செய்தார். மேலும் அதை தனது சீடர்களுக்கும் கற்பித்தார்.

பிகாரி லால் யாதவ்
பிறப்புபிகாரி லால் யாதவ்
1857
அவுன்ரிகார், காசிப்பூர், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா (present-day காசீப்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு1926
தொழில்
  • கவிஞர்
  • பாடகர்
  • இசையமைப்பாளர்
மொழி
தேசியம்இந்தியர்
காலம்பிரித்தானிய அரசு
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • பிராகா எனும் கிராமிய இசை வகையின் தோற்றுநர்
  • கர்தல் என்ற கருவியின் மற்றொரு வடிவத்தை உருவாக்கினார்.

வாழ்க்கை தொகு

பிகாரி 1857 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள அவுன்ரிஹார் நகருக்கு அருகிலுள்ள பாட்னா என்ற கிராமத்தில் போஜ்புரியா அகிர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு ஒரே மகன். இவரது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார், மேலும் இவர் பதினான்கு வயதில் வேலை தேடி வாரணாசிக்குச் செல்ல வேண்டியிருந்தது. நிச்சி பாக் அருகே அகிரியானாவில் நிரந்தரமாக வசித்து வந்தார். வாரணாசி கோவில்களில் பிரகா இசைக்க ஆரம்பித்தார். அங்கு இவர் ஒரு கவிஞராகவும் பாடகராகவும் புகழ் பெற்றார், பின்னர் இவருக்கு ராமன் யாதவ், கணேச யாதவ், பட்டு யாதவ் மற்றும் சர்ஜு ராஜ்பர் ஆகிய நான்கு சீடர்களைப் பெற்றார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. Asian Music: Journal of the Society for Asian Music, Volumes 25-2. Society for Asian Music. 1994. பக். 145. 
  2. The Concise Garland Encyclopedia of World Music. Routledge. 2013. பக். 1027. 
  3. Culture and Power in Banaras: Community, Performance, and Environment, 1800-1980. University of California. 1992. பக். 95–96. https://archive.org/details/culturepowerinba0000unse_t4s3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகாரி_லால்_யாதவ்&oldid=3812539" இலிருந்து மீள்விக்கப்பட்டது