பிங்கன் மம்போ

இந்தோனேசிய பாடகர்

பிங்கன் ரத்னசிறீ மம்போ (பிறப்பு  : 11 நவம்பர் 1980) பொதுவாக பிங்கன் மம்போ என்றும் அழைக்கப்படும் இவா், இந்தோனேசிய பாப் பாடகர் பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். 2000 மற்றும் 2004 க்கு இடையில் இந்தோனேசிய இசை இரட்டையர் பாடல் குழுவான ரத்துவில் பாடகராக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார், பின்னர் ஒரு தனிப்பாடகியாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

பிங்கன் மம்போ
பிங்கன் ரத்னசிறீ மம்போ
பிறப்புபிங்கன்
11 நவம்பர் 1980
ஜகார்தா, இந்தோனேசியா
தேசியம்இந்தோனேசியர்
பணிபாடகர், பாடலாசிரியர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மஸ்யா ரேசா டோப்ரோனி (திருமணம்: 2004 விவாகரத்து: 2004) சாண்டி சஞ்சாயா (திருமணம்: 2005 விவாகரத்து: 2009) ஸ்டீவ் வாண்டானியா (திருமனம் : 2013 முதல் )
பிள்ளைகள்5

ஆரம்ப வாழ்க்கை

தொகு

மம்போ 1980 ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி ஜகார்த்தாவில் பிறந்தார் . யோக் எஃப். மம்போ மற்றும் அவரது மனைவி டீட்ஜே சயரிஃப் ஆகியோருக்கு. இவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவரான மம்போ ஒரே பெண் குழந்தை ஆவார்.. மம்போவிற்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவருடைய பெற்றோர் விவாகரத்து செய்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, அவரது தாயார், மம்போவை பள்ளிக்கு அனுப்ப முடியாததால், மாம்போ தனது பாட்டியுடன் வசிக்க அனுப்பப்பட்டார். மற்ற இரண்டு உடன் பிறந்தவா்களும் தங்கள் தாயுடன் தங்கினர். [1] [2]

ஜகார்த்தாவில் பிறந்து வளர்ந்த மம்போ சிறு வயதிலேயே பாடத் தொடங்கினார்,இருப்பினும் தான் பதின்ம வயதை எட்டிய பின்னரே பொது வெளியில் பாடத் தொடங்கினார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே, அவர் ஒரு கபே பாடகியாக ஒரு வேலையைத் தொடங்கினார் மேலும் ஜகார்த்தா முழுவதும் ஏராளமான இடங்களில் தனது பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 2000 ஆம் ஆண்டில், தேவா 19 இசைக்குழுவின் பாடகியான எஸ்டியான்டியின் கணவர் அஹ்மத் தானியைச் சந்தித்த பின்னர், ரதுவின் ஒரு பகுதியாக பாடலாசிரியரும் இசை தயாரிப்பாளருமான மியா எஸ்டியான்டியுடன் சேர்ந்தார்; பிறகு, தானி தனது மனைவிக்காக நிறுவிய இசைக்குழுவில் சேர பிங்கன் மாம்போவை அழைத்தார், மேலும் இந்த இசைக்குழுவை நிர்வகிக்க இவருக்கு அனுமதி அளித்தார். இருவரும் வெற்றிகரமாக இசைப் பணனத்தை தொடர்ந்த போதும், மம்போவின் எதிர்பாராத கர்ப்பம் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த இசைக் குழுவிலிருந்து வெளியேறினார். பின்னர் அவர் சோனி பி.எம்.ஜி என்ற இசை நிறுவனத்துடன் இணைந்து ஒரு தனி இசை வாழ்க்கையைத் தொடங்கினார் . 2012 அம் அண்டு மூன்று தனி இசைத் தொகுப்புகளை வெளியிட்டார் . பின்னா் அவர் 2010 இல் செலிமுட் பெர்தாரா என்ற ஒரு படத்திலும் நடித்தார்.

மேடைக்கலைஞராக மம்போ ஒரு ஆற்றல்மிக்க இசைக் கலைஞராக அறியப்படுகிறார், அவர் பார்வையாளர்களை அடிக்கடி தனது செயலால் கவனம் ஈா்க்கிறார். மேலும் அவர் மற்ற கலைஞர்களுடன் ஒத்துழைத்து பாடுவதில் வல்லராவார். உள்ளூர் இசைக்குழுக்களுடன் பணிபுரிகிறார், அவர் இசைக் கச்சேரியை நிகழ்த்தும்போது மற்றவர்கள் அவரது பாடல்களை எழுத வேண்டும். நான்கு குழந்தைகளின் தாயான பிங்கிங் மம்போ 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் இசை-வீடியோ இயக்குநர் ஸ்டீவ் வாண்டானியாவை மணந்தார் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ரத்து இசைக்குழு

தொகு
 
மம்போ பாடிய இசைக்குழுவான ரத்துவின் அகமது தானி

1999 ஆம் ஆண்டில் மியா எஸ்டியான்டியும் அவரது கணவர் அஹ்மத் தானியும் ஒரு பாடகர் மற்றும் இசைக்கலைஞரைக் கொண்ட ஒரு இசை இரட்டையர் குழுவை நிறுவினர், இது சர்வதேச இசைக்குழுக்களான ரோக்செட் மற்றும் சாவேஜ் கார்டன் போன்ற முன்னோடி இசைக்குழுக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. [3] இந்த இசைக்குழுவைத் துவங்கிய பின் இருவரும் ஒரு பாடகரைத் தேடத் தொடங்கினர். தெற்கு ஜகார்த்தாவில் உள்ள பாண்டோக் இந்தா மாலில் உள்ள ஒரு உணவு விடுதி ஒன்றில் மம்போ இருந்தபோது அவரைச் சந்தித்தபின ராணி எனப் பொருள் படும் ரத்து என்ற இசைக்குழுவிற்கான ஆறாவது கலைக்காணலுக்கு பிறகு, அவர் இசைக்குழுவின் பாடகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்போ திரிசக்தி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்கத் தொடங்கினாலும், அவரது ஒப்பந்தத்தின் அழுத்தம் காரணமாக அவர் இசைக்குழுவிலிருந்து விலக நோ்ந்தது. [4]

தொழில்

தொகு

மாம்போ நீண்ட காலமாக ஒரு தனி பாடகராக வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொண்டார்.[3] இவர் ரத்து இசைக்குழுவை விட்டு வெளியேறிய பிறகு, சோனி பி.எம்.ஜி அசை வெளியீட்டு நிறுவனத்தால் ஆறு தனி இசைத்தொகுப்புகளுக்காக கையெழுத்திட்டார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கன்_மம்போ&oldid=4162306" இலிருந்து மீள்விக்கப்பட்டது