பிசர் கிளைகோசைடாதல்
பிசர் கிளைகோசைடாதல் (Fischer glycosylation) என்பது அமிலத்தின் முன்னிலையில் ஓர் ஆல்டோசு அல்லது கீட்டோசு ஓர் ஆல்ககாலுடன் வினைபுரிந்து கிளைகோசைடு உருவாகும் வினையைக் குறிக்கும். 1902 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரும் செருமானிய வேதியியலாளருமான எமில் பிசர் 1893 மற்றும் 1895 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவ்வினையை உருவாக்கினார் [1][2][3]. பிசர் கிளைகோசைடேற்றம் என்ற பெயராலும் இவ்வினை அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஆல்ககாலிலுள்ள கார்போவைதரேட்டு கரைசல் அல்லது தொங்கலைப் பயன்படுத்தி இவ்வினை நிகழ்த்தப்படுகிறது. வழக்கமாக கார்போவைதரேட்டு முழுக்க முழுக்க பாதுகாப்பற்றதாகும். பிசர் கிளைகோசைடாதல் வினை ஒரு சமநிலை செயல்முறையாகும். இவ்வினையில் வளைய அளவு மாற்றியன்கள், ஒற்றை மாற்றியன்கள், சில சந்தர்ப்பங்களில் வளையமிலா மாற்றியன்கள் தோன்றுகின்றன.
வினையில் எக்சோச்சுகள் பயன்படுத்தப்படுகிரது எனில் குறுகிய வினைகளில் வழக்கமாக பியுரனோசு வளைய வடிவங்களும் நீண்ட வினைகள் நிகழ்கையில் பைரனோசு வடிவங்களும் தோன்றுகின்றன. நீண்ட வினைகளின்போது வெப்பவியக்கவிசையின்படி நிலைப்புத்தன்மை கொண்ட விளைபொருள் உருவாகிறது. இதனால் ஒற்றை மாற்றிய விளைவினால் பொதுவாக ஆல்பா ஒற்றை மாற்றியன் தோன்றுகிறது.
.
மேற்கோள்கள்
தொகு- ↑ Emil Fischer (1893). "Ueber die Glucoside der Alkohole". Berichte der deutschen chemischen Gesellschaft 26 (3): 2400–2412. doi:10.1002/cber.18930260327.
- ↑ Emil Fischer; Leo Beensch (1894). "Ueber einige synthetische Glucoside". Berichte der deutschen chemischen Gesellschaft 27 (2): 2478–2486. doi:10.1002/cber.189402702248.
- ↑ Emil Fischer (1895). "Ueber die Verbindungen der Zucker mit den Alkoholen und Ketonen". Berichte der deutschen chemischen Gesellschaft 28 (1): 1145–1167. doi:10.1002/cber.189502801248.
- ↑ Izumi, Minoru; Fukase, Koichi; Kusumoto, Shoichi (2002). "TMSCl as a mild and effective source of acidic catalysis in Fischer glycosidation and use of propargyl glycoside for anomeric protection". Bioscience, Biotechnology, and Biochemistry 66 (1): 211–214. doi:10.1271/bbb.66.211.