பிசுதயோசெமிகார்பசோன்
பிசுதயோசெமிகார்பசோன் (Bisthiosemicarbazone) என்பது தயோசெமிகார்பசைடுக்கும் ஓர் இருகீட்டோனுக்கும் இடையில் நிகழும் நீக்கல் வினையில் உருவாகும் வழிப்பெறுதியாகும். இவற்றின் கட்டமைப்பு H2NHC(=S)NN=C(R1)−R2−C(R3)=NNHC(=S)NH2 என்பதாக அமையும். ஒரு தயோசெமிகார்பசோன் என்பது செமிகார்பசோனில் உள்ள கீட்டோனிக் ஆக்சிசனுக்குப் பதிலாக ஒரு கந்தக அணுவைக் கொண்டிருக்கும். பிசுதயோசெமிகார்பசோன்கள் வைரசு எதிர்ப்பு, மலேரிய எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.[1] பொதுவாக செல்களில் இவை தாமிரம் அல்லது இரும்புடன் பிணைப்பதன் மூலம் செயல்படுகின்றன. இவை கதிரியக்க ஐசோடோப்பு விநியோகத்திற்குச் சாத்தியமான தசைநார்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக இதயம், மூளை போன்ற உறுப்புகளிலுள்ள தாழாக்சிய திசுக்களை இவை தேர்ந்தெடுக்கின்றன.[2][3][4] துத்தநாக அணுக்களுடன் கொடுக்கிணைப்பு செய்யப்படும்போது சில பிசுதயோசெமிகார்பசோன்கள் ஒளியியல் நுண்ணோக்கியில் ஒளிரும் முகவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Palanimuthu, Duraippandi; Shinde, Sridevi Vijay; Somasundaram, Kumaravel; Samuelson, Ashoka G. (14 February 2013). "In Vitro and in Vivo Anticancer Activity of Copper Bis(thiosemicarbazone) Complexes". Journal of Medicinal Chemistry 56 (3): 722–734. doi:10.1021/jm300938r. பப்மெட்:23320568.
- ↑ Dearling, Jason L.; Lewis, Jason S.; Mullen, Gregory E.; Welch, Michael J.; Blower, Philip J. (20 April 2014). "Copper bis(thiosemicarbazone) complexes as hypoxia imaging agents: structure-activity relationships". Journal of Biological Inorganic Chemistry 7 (3): 249–259. doi:10.1007/s007750100291. பப்மெட்:11935349.
- ↑ Maurer, Richard I.; Blower, Philip J.; Dilworth, Jonathan R.; Reynolds, Christopher A.; Zheng, Yifan; Mullen, Gregory E. D. (March 2002). "Studies on the Mechanism of Hypoxic Selectivity in Copper Bis(Thiosemicarbazone) Radiopharmaceuticals". Journal of Medicinal Chemistry 45 (7): 1420–1431. doi:10.1021/jm0104217. பப்மெட்:11906283.
- ↑ Cowley, Andrew R.; Dilworth, Jonathan R.; Donnelly, Paul S.; Labisbal, Elena; Sousa, Antonio (May 2002). "An Unusual Dimeric Structure of a Cu(I) Bis(thiosemicarbazone) Complex: Implications for the Mechanism of Hypoxic Selectivity of the Cu(II) Derivatives". Journal of the American Chemical Society 124 (19): 5270–5271. doi:10.1021/ja012668z. பப்மெட்:11996559.