பிசுமடைட்டு

கார்பனேட்டு கனிமம்

பிசுமடைட்டு அல்லது பிசுமதைட்டு (Bismutite or bismuthite) என்பது பிசுமத் தனிமத்தின் கார்பனேட்டு வகை கனிமமாகும். பிசுமத் துணைகார்பனேட்டை குறிக்கும் Bi2(CO3)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் பிசுமடைட்டு விவரிக்கப்படுகிறது. பிசுமத்தினைட்டு, பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறை போன்ற மற்ற பிசுமத் கனிமங்களின் ஆக்சிசனேற்ற விளைபொருளாக பிசுமடைட்டு தோன்றுகிறது.[2] செஞ்சாய்சதுர படிக வடிவத்தில் படிகமாகும் பிசுமடைட்டு மண்ணோடு மண்ணாகவும் இழைகளாகவும் கிடைக்கிறது.[1]

பிசுமடைட்டு
Bismutite
செருமனியில் கிடைத்த பிசுமடைட்டு
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBi2(CO3)O2
இனங்காணல்
நிறம்மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறம், பசுமை,சாம்பல் பச்சை, சாம்பல் அல்லது கருப்பு
படிக இயல்புமிகவும் அரிதான தகடு
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புதனித்துவம்/ {001} இல் தெளிவாக (நுண்ணோக்கி வழி பார்த்தது)
மோவின் அளவுகோல் வலிமை2.5 - 3.5
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு, வமெழுகுத் தன்மை, மண் போல மங்கலாகத் தெரியும்
கீற்றுவண்ணம்சாம்பல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது மற்றும் ஒளி கசியும் சிறிய மணிகள்
ஒப்படர்த்தி6.7 - 7.4 அளக்கப்பட்டது, 8.15 கணக்கிடப்பட்டது
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-) (ஆனால் ஓரச்சு போல தோன்றும்)
ஒளிவிலகல் எண்a=2.12-2.15, b=2.12-2.15, g=2.28
இரட்டை ஒளிவிலகல்0.1300-0.1600
2V கோணம்45
மேற்கோள்கள்[1][2][3][4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிசுமடைட்டு கனிமத்தை Bit[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

செருமன் நாட்டின் சேக்சோனி மாநிலத்தில் 1841 ஆம் ஆண்டு பிசுமடைட்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

பிசுமத்தினைட்டு என்ற கனிமத்தைக் குறிக்க பிசுமத்தைட்டு என்ற பெயர் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமடைட்டு&oldid=4093496" இலிருந்து மீள்விக்கப்பட்டது