பிசுமைட் (Bismite) என்பது பிசுமத் தனிமத்தின் ஆக்சைடான பிசுமத் மூவாக்சைடின் (Bi2O3) இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருளாகும். இது ஒற்றைச்சரிவுப் படிகவமைப்புக் கனிமமாகக் காணப்படுகிறது. ஆனால், களிமண் போன்று திண்ணியதாகவும் பேரளவு வடிவப் படிகங்கள் இல்லாமலும், பச்சையில் இருந்து மஞ்சள் வரையிலும் வேறுபட்ட நிறத்துடனும் இதன் தோற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

பிசுமைட்
பிசுமைட்
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமங்கள்
வேதி வாய்பாடுBi2O3

கனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோல் மதிப்பு 4 முதல் 5 வரையாகவும் மற்றும் ஒப்படர்த்தி மதிப்பு 8.5 முதல் 9.5 ஆகவும் உயர்ந்த அளவுகளை இந்த அலோகம் பெற்றுள்ளது. முதல்நிலை பிசுமத் கனிமத்திலிருந்து உருவாகும் பிசுமைட் இரண்டாம்நிலை ஆக்சிசனேற்ற நிலை பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 1868 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நெவாதாவிலுள்ள கோல்டுபீல்டு நகரத்திலும், செருமனியின் சாக்சோனியிலுள்ள இஸ்கீனிபெர்கு கனிம மலையிலும் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமைட்&oldid=1870207" இலிருந்து மீள்விக்கப்பட்டது